×
 

வெறும் வெயிற்றில் இதை குடிங்க, ஹீரோயின் போல ஜொலிபிங்க...

நம் முகத்தை பார்த்து தான் நம்மிடம் பேசவே நெருங்குவார்கள், அந்த முகம் ஹீரோயின் போல ஜொலிக்கனும் என்று நாம் அனைவருக்கும் ஆசை உண்டு. அதற்கு வெறும் வயிற்றில் நாம் குடிக்கும் இந்த பானம் சிறந்த பலனைத் தரும்...

நாம் அழகாக இருக்கவேண்டும் என அனைவருக்கும் ஆசை உண்டு. நம் தோல் மிளிர வேண்டும் என்றால் அதற்கு நம் இரத்தம் சுத்தமாக இருக்க வேண்டும், உள்ளுறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே இரத்தம் கெட்டுவிட்டது என்றாலே தோல் கருமையாக விரைவில் மாறிவிடும், வெயிலினால் எளிதில் கருமை ஆகிவிடும். மிகவும் சோர்வாக இருக்க தோன்றும், கண்களுக்கு அடியில் கருவளையம் தோன்றும். நம் வேர்க்கால்கள் எனக் கூறக்கூடிய இரத்தம் சுத்தமாக இருக்க வெறும் வயிற்றில் சில பானத்தை பருகிவருவது மிகவும் அவசியம். காலேஜ் படிக்கிறவங்களாக இருந்தாலும் சரி, வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி இந்த பானத்தை பருகி வரலாம்.

ஸ்கின் ஒயிட்டனிங் மில்க் ஷேக்;

பசும் பால் - 1க்ளாஸ்

பாதாம் பவுடர் - 1 ஸ்பூன்

பன்னீர் ரோஜா பவுடர் - 1ஸ்பூன்

அக்ரூட் - சிறிதளவு

பாதாம் பிசின் - 3 ஸ்பூன்

நல்ல நாட்டு பசும் பாலை கொதிக்கவைத்து அதில் பாதம் பவுடர், பன்னீர் ரோஸ் பவுடர், அக்ரூட் சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கிவிடவும். ஓரளவு மிதமான சூடு வரும் போது அதில் பாதாம் பிசின் நாட்டு சக்கரை அல்லது தேன் சேர்த்து பருகி வரலாம். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வரும் பொது முகம் மிளிர்ந்து ஜொலிக்க ஆரம்பிக்கும். பார்ப்பவர்கள் நீங்க இப்போ ரொம்ப அழகா தெரியிறீங்களே என கேட்கும் அளவுக்கு இருக்கும்.

இதையும் படிங்க: உங்க இளமை திரும்ப வேண்டுமா? ஜொஜோபா ஆயில் போதுமே...

பத்து வயது குழந்தை முதல் இந்த பானத்தை குடித்து வரலாம். உடல் இளைத்து சோர்வாக இருக்கும் குழந்தைகள் மூளை சுறுசுறுப்பாகவும் உடலும் சதை பற்றோடு மாறவும் இது வழிவகுக்கும். தோலும் சிகப்பழகு மின்ன ஜொலிக்க ஆரம்பிக்கும்.

ஸ்கின் ஒயிடெனிங் ஜூஸ் ;

வெள்ளரிக்காய் - 1

பீட் ரூட் - சிறியது 1

கேரட் - 1

நெல்லிக்காய் - 1

புதினா - ஒரு கைப்பிடி

கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி

எலுமிச்சை சாறு - 1ஸ்பூன்

தேன் - 1 ஸ்பூன்

வெள்ளரிக்காய், பீட் ரூட், கேரட், நெல்லிக்காய், புதினா, கொத்தமல்லி இலை இவை அனைத்தையும் மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்பு வடிகட்டிய ஜூஸ் உடன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் தேவைப்பட்டால் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். வெள்ளரிக்காய் கல்லீரைலை சுத்தம் செய்வதில் மிகவும் வல்லமை கொண்டது, நெல்லிக்காய், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி இரத்தத்தை சுத்தம் செய்யும், பீட்ரூட்டில் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது இது நரம்பு வலுவடைய துணை புரியும், கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது அது கண்ணுக்கும், தோலுக்கும் மிகவும் நல்லது. புதினா, கொத்தமல்லி இரத்தத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எனவே இவை அனைத்தையும் சேர்த்து நாம் ஜூஸ் ஆக எடுத்துக்கொள்ளும் போது மொத்த உடலும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, நம் தோலும் மின்ன ஆரம்பிக்கும், வசீகரிக்கும் முக அழகு கிடைக்கும். வாரம் மூன்று முறை தொடர்ச்சியாக நாம் எடுத்து வருவது மிகவும் சிறப்பான பலனைத் தரும்.

பாதாம் மில்க் ஷேக், காய்கறிகள் நிறைந்த வெள்ளரிக்காய் ஜூஸ் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவது இரத்தத்தை சுத்தம் செய்து, நோய் எதிர்ப்பு சக்திகளை விரிவடையச் செய்து ஆரோக்கியமாக வாழ உதவுகிறது. அதனால் முகமும் நம் தோலும் மிகவும் அழகாகவும், பொலிவாகவும் நல்ல கலராகவும் மாற்றுகிறது.

 

இதையும் படிங்க: அடர்த்தியான புருவம் வேண்டுமா ? இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share