×
 

தயிர் ஒன்னு இருந்தாலே போதும், ஸ்கின்னு சும்மா மின்னும்...

நம் எல்லோருடைய வீட்டில் அன்றாடம் இருக்கும் தயிரை வைத்து எண்ணற்ற தோல் பிரச்சினைகளை சரிசெய்து பளிங்கு போல் மின்னும் சருமத்தை பெறலாம். இதனை மேலும் எந்தெந்த பொருட்களுடன் சேர்த்து கூடுதல் பலனை பெறலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

தலை மற்றும் முகமே நம் உடலின் பிரதானமாக அமைந்துள்ளது. நம் முகத்தில் முகப்பரு, கரும் புள்ளிகள், தேமல், பொலிவின்றி சோர்வாக இருந்தால் யாரும் வந்து பேசக்கூட தயங்குவர். ஆகவே, எவ்வளவு வயதானாலும் சரி, முக பராமரிப்பு என்பது மிகவும் அவசியம்.

அன்றாடம் நம் வீட்டில் தயாரிக்கும் தயிரில் உடலுக்கு நன்மை பயக்கும் புரதம், கால்சியம், வைட்டமின் - டி, ப்ரோ பையோட்டிக் பாக்டிரியாக்கள், லாக்டிக் அமிலங்கள், ஆன்டி இன்ஃப்லமெட்டரி குணங்கள் நிறைந்துள்ளன. தயிர் முகம் மற்றும் சரும நோய்களுக்கு இது சிறந்த தீர்வாக உள்ளது. இவ்வளவு நண்மைகள் கொண்ட தயிரை வேறு சில பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் குறிப்பிட்டத் தக்க மாற்றத்தை பெறலாம்.

பருக்கள் நீங்க ;

ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்து நன்கு கலந்து முகம் முழுக்க தடவ வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும். கஸ்தூரி மஞ்சள் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்கள், ஆன்டி இன்ஃப்லமெட்டரி குணங்கள் நிறைந்துள்ளதால், பருக்களை சரி செய்வதோடு மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுகிறது. மேலும் தயிர் ஈரப்பதமாகவும் மிருதுவாகவும் வைத்துக் கொள்கிறது. இதனை வாரம் இருமுறை செய்து வருவது நல்லது.

இதையும் படிங்க: முகம் என்றும் இளமையுடன் இருக்கணுமா ? இதை பண்ணி பாருங்க

முகம் பளிச்சென்று மாற ;

ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் தயிர், சிறிதளவு லெமன் ஜூஸ், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி வரவும். இருபது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதி்லுள்ள கடலை மாவு இறந்த செல்களை சுத்தம் செய்து புதிய தோற்றம் கொடுக்க உதவுகிறது. தேன் மற்றும் லெமன் ஜூஸ் இயற்கையான ப்ளீச்சாக செயல்பட்டு முகத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும். இதனை வெயில் காலங்களில் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செய்தால் நல்ல பலனைத்தரும்.

முகச் சோர்வு நீங்கி புத்துணர்வு பெற ;

ஒரு பவுலில் 1ஸ்பூன் அரைத்த புதினா விழுது ,1ஸ்பூன் தயிர் , 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி , தேன் அரை ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். புதினா இலைகளில் உடல் சூட்டை தணிக்கும் குணங்கள் உள்ளதால் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனை வரம் ஒரு முறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை செய்து பயன்பெறலாம்.

முகத்தில் வழியும் பிசுப்பை கட்டுப்படுத்த;

ஒரு பவுலில் 2 ஸ்பூன் துருவிய வெள்ளரிக்காய், 2ஸ்பூன் தயிர், 2 ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வரவும். வெள்ளரிக்காயில் உள்ள மூலக்கூறுகள் முகத்தில் சுருக்கம், அதிகப்படியான எண்ணெய் பிசுபிசுப்பை கட்டுப்படுத்தி நல்ல நீரேற்றம் பெறச் செய்து க்ளோவாக வைத்திருக்கும். ஓட்ஸ் இயற்கையான க்ளென்சராகவும் மாய்ஸ்சூரைசராகவும் செயல்பட்டு வெயிலில் ஏற்பட்ட கருமை நிறம் மாற உதவும். இதனை வாரம் ஒரு முறையோ அல்லது முக்கிய விசேஷங்களுக்கு போகும் முன்பு செய்து கொள்ளலாம்.

முகத்தில் இறந்த செல்களை நீக்க ;

ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் காபி பொடி சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து கழுவ வர வேண்டும். காபியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டஸ்கள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும் புது செல்களின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாகவும் உள்ளது. மஞ்சள் மற்றும் தயிர் முகத்தை க்ளோவாகவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. இதனை வாரம் ஒரு முறை செய்தாலே போதும்.

இவ்வாறு, மிகவும் எளிமையாக நம் வீட்டிலுள்ள தயிரை வைத்து முகத்திலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் கலைந்து அழகாக தோற்றமளிக்கலாம்.

இதையும் படிங்க: முகம் பளிச்னு ஆகணுமா? ஆரஞ்சு தோல் போதுமே

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share