முகம் பளிச்னு ஆகணுமா? ஆரஞ்சு தோல் போதுமே
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் துணை புரிகிறது. அது போல ஆரஞ்சு பழத்தின் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளதால் அது முகப்பொலிவுக்கும் பளபளப்புக்கும் பெரிதும் துணை புரிகிறது.
ஆரஞ்சு தோல் முகத்தில் பயன்படுத்தி வந்தால் கருமை நிறம் மாறி, சுருக்கங்கள் நீங்கி, முகம் பளப்பளப்பாகவும், இளமையாகவும் தோற்றமளிக்கும். இதிலுள்ள வைட்டமின் சி சத்து டல்லாகவும், ஆயில் சருமம் உள்ளவர்களுக்கும் சிறந்த தீர்வு. முகத்தில் வடியும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தி தினமும் ஃரெஷான லுக்காக வைத்துக்கொள்ளும். முகப்பருக்கள் வராமல் தடுக்கவும், முகப்பருக்கள் வந்து சென்ற தழும்புகள் மறையவும் இது உதவியாக இருக்கும்.
ஆரஞ்சு பழத்தின் தோலை தினமும் சேகரித்து வைத்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து வெயிலில் உலர்த்தி காய வைக்க வேண்டும். நன்கு காய வைத்தபின் மிக்சியில் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து கீழ் கண்டவாறு பயன்டுத்தலாம்.
முகம் பளபளப்புக்கு ஆரஞ்சு ஓட்ஸ் பேஸ் பேக் ;
ஆரஞ்சு தோல் போடி - 2 தேக்கரண்டி
ஓட்ஸ் போடியாக அரைத்தது - 1 தேக்கரண்டி
பால் - 3தேக்கரண்டி
தென் - அரை தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் - 1 தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு தோல் பொடி, ஓட்ஸ் இரண்டையும் சேர்த்து அதனுடன் பால் விட்டு நன்றாக கலவையாக கிளறி வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேன் மேற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். ரெடியான இந்த பேஸ் பேக்கை ஏற்கனவே, நன்றாக சுத்தம் செய்த முகத்தில் தடவ வேண்டும். பிறகு வட்ட வடிவில் தேய்த்து கொடுத்து 10 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முதல் மூன்று முறை செய்து முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: பிரபலமாகும் கேரட் ஆயில், உண்மையில் பயன் தருமா ?
முகத்தில் கரும்புள்ளிகள் நீங்க ஆரஞ்சு கற்றாழை ஜெல் ;
ஆரஞ்சு பொடி - 2 தேக்கரண்டி
கற்றாழை - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத்தேக்கரண்டி
ஒரு சிறிய பாத்திரத்தில் ஆரஞ்சு பொடி, கற்றாழை ஜெல் , மஞ்சள் தூள் மூன்றையும் சேர்த்து நன்றாக ஒரு கலவையாக கிளறி வைத்துக் கொள்ளவேண்டும். முகத்தில் அப்படியே தடவி லேசாக வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். ஒரு பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்தில் மூன்று முறை செய்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள், பருக்கள் வந்து சென்ற சுவடுகள் மாறி பளிச்சென்று மாறும்.
வெயிலினால் ஏற்பட்ட கருமை நிறம் மாற, ஆரஞ்சு மஞ்சள் பேஸ்பேக் ;
ஆரஞ்சு பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் - 1 தேக்கரண்டி
தென் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - அரை மூடி
ஆரஞ்சு பொடி, மஞ்சள், தென், எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15 நிமிடம் அப்படியே விட்டு விட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வர வெயிலினால் ஏற்பட்ட கருமை நிறம் மெல்ல மெல்ல மாறும்.
மிருதுவான சருமத்திற்கு ஆரஞ்சுபொடி தயிர் பேஸ்பேக்;
ஆரஞ்சு பொடி - 2 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
தேன் - 1 தேக்கரண்டி
இந்த மூன்று பொருட்களையும் ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு நல்ல கலவையாக கிளறி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வர வேண்டும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் முகம் பளிச்சென்று மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.
ஆரஞ்சு தோல் ஸ்கரப்:
ஆரஞ்சு தோல் - 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
சக்கரை - 2 தேக்கரண்டி
இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அதனை முகத்தில் வட்ட வடிவில் இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை தேய்க்க வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகத்திலுள்ள டெட் ஸ்கின்ஸ் மறைந்து புதிய பொலிவுடன் காட்சி கொடுப்பீர்.
ஆரஞ்சு ஸ்கின் டோனர் ;
ஆரஞ்சு தோல் பொடி - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 டம்பளர்
ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் ஆரஞ்சு தோல் பொடியை சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து இந்த கலவையை வடிகட்டி ஆறிய பின் ஒரு பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜ்ல் வைக்கவும். தினமும் முகம் கழுவிய பின் இந்த ஆரஞ்சு டோனரை பயன்படுத்த வேண்டும். இது தோலை எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ளும்.
ஆரஞ்சு பழத் தோலை வீணாக குப்பையில் போடாமல் பொடியாக செய்து வைத்துக்கொண்டு நம் முகத்தில் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி பயன் பெறலாம்.
இதையும் படிங்க: சியா சீட்ஸ் பயன் படுத்துறீங்களா ? அவசியம் இதை படிங்க