சிறு வயதிலே முகத்தில் சுருக்கங்கள் வருவது சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெரும்பாலும் நாம் செய்யும் வேலை அதை சார்ந்து வரும் வாழ்க்கை முறை மாற்றம் தான் முக்கிய காரணமாக அமைவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இரவில் நெடுநேரம் கண் முழித்து கணினி முன் வேலை செய்வது, மொபைல் போன்கள் அதிக நேரம் பார்ப்பது, சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது, போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உணவில் போதிய ஊடசத்துக்கள் இல்லாமால் இருப்பது, சிகரெட், மது அருந்துவது உள்ளிட்ட காரணங்கள் பெரும் பங்காற்றுகின்றன.

சில நபர்களுக்கு தன் தாய் தந்தை வழியாய் முகசுருக்கங்கள் இளமையிலே தோன்றலாம். நாம் மேற்கூறிய பழக்கவழக்கங்களை சரி செய்து, நாம் வீட்டில் சில அழகு குறிப்புகளை பின்பற்றி வந்தாலே எளிமையாக சரி செய்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: அடர்த்தியான புருவம் வேண்டுமா ? இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்

முகச்சுருக்கம் வருவதற்கு முக்கிய காரணியாக கொலாஜன் உற்பத்தி குறைபாடு என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே இயற்கையாக கொலாஜனை சில பொருள்களை முகத்தில் பூசிக்கொள்வது மூலமாக அதனை மீண்டும் தக்கவைத்து கொள்ளமுடியும். ஹெர்பல் முறையில் நாம் செய்யும் ஆயில் மசாஜ்கள் தோலுக்கு எலாஸ்ட்டி சிட்டியை, சுருக்கத்தை சரி செய்து தந்து வயோதிகத்தை குறைத்து முகத்தை பளபளப்பாக ஜொலிக்கச் செய்யும். இதனை முகம் மற்றும் உடல் முழுக்க கூட பூசி வரலாம்.

அதற்கு முதலில் ஜொஜோபா ஆயில் பெரிதும் துணை புரியும். அது அவ்வளவு எளிதில் கிடைக்காது தேடி பிடித்துத்தான் வாங்க வேண்டும்.
ஜொஜோபா ஆயில்
மசித்த வாழைப்பழம் - 2 ஸ்பூன்
கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்
தேன் -1 ஸ்பூன்
கடலை மாவு - 1 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
ஜொஜோபா ஆயில் சிறிதளவு உள்ளங்கையில் எடுத்துக் கொண்டு சூடு பறக்க தேய்த்து அதனை முகத்தில் தடவி மசாஜ் கொடுக்கவும். கழுத்து, தாடையில் இருந்து தொடங்கி, கன்னம் வழியாக மூக்கு, நெற்றி பகுதிகளில் வட்ட வடிவில் மேல் நோக்கி தடவி வர வேண்டும். நெற்றி புருவம், கண்ணை சுற்றி மசாஜ் செய்து விடவும். தேவைப்பட்டால் மீண்டும் கையில் எண்ணெயை தேய்த்துக் கொண்டு 10 நிமிடம் தொடர்ந்து செய்யவேண்டும். அதன்பிறகு மசித்த வாழைப்பழம், கற்றாழை ஜெல், தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் கொடுக்கவும். ஒரு 5 நிமிடம் தொடர்ந்து மசாஜ் கொடுத்து அதை அடுத்த 5 நிமிடம் அப்படியே விட்டு விடவும். பிறகு கடலைமாவு, அரிசிமாவு, தயிர் சேர்த்து கலைவையாக முகம் முழுக்க பூசி அதனை 15 நிமிடம் நன்றாக காய விடவும். கண்ணைச் சுற்றியுள்ள இடத்தில் வெள்ளரிக்காய் வைப்பதற்கு பதில் இந்த மசித்த வாழைப்பழத்தையே வைத்து மூடி விடலாம். வாழைப்பழத்தில் வைட்டமின் ஈ, ஏ, சி உள்ளதால் கண்ணை சுற்றியுள்ள கருமை நிறம் மறைந்து கண் பொலிவாக இருக்கச்செய்யும். இப்போது 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

இதுபோன்று அதிக செலவில்லாமல் நம் வீட்டிலுள்ள எளிமையான பொருட்களை கொண்டு நாம் வாரம் ஒரு முறை செய்து வந்தாலே முகச்சுருக்கம் நீங்கி நல்ல பளபளப்பாக இளமையாக மாறிவிடும், 45, 65 வயதுடையவர்கள் இதனை கண்டிப்பாக செய்து வரவேண்டும்.
இதையும் படிங்க: பெண்கள் மீசை, தாடி முளைப்பதை வீட்டிலே சரி செய்யலாம்...