சூரிய ஒளி தாக்கதால் ஏற்படும் மெலனின் உற்பத்தி நம் கருமை நிறத்திற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. இது மேலும் நம் முகத்தை சோர்வாகவும் பொலிவின்றியும் வைத்து விடுவதால் பார்ப்பதற்கு டல்லாக தெரிவோம். இதனை மிகவும் எளிமையாக வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே சரி செய்யலாம். அதாவது இரண்டு மடங்கு கூடுதல் சிகப்பழகை பெற்று புத்துணர்ச்சியை பெறலாம்.
சோள மாவு,கோதுமை பேஸ் பேக் ;
சோள மாவு - 1ஸ்பூன்
கோதுமை மாவு - 1 ஸ்பூன்
சக்கரை தூளாக்கியது - 1ஸ்பூன்
கெட்டியான தயிர் - 2ஸ்பூன்
பால் - 2 ஸ்பூன்
ஒரு சுத்தமான பவுலில் சோளமாவு, கோதுமை மாவு, தூளாக்கிய சக்கரை, இதனுடன் தயிர் மற்றும் பால் சேர்த்து நல்ல மிருதுவான பேஸ்டாக வரும் வரை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். கிரீம் போன்ற பதம் வந்தவுடன் முகம், கண்ணை சுற்றியுள்ள பகுதிகள், கழுத்து பகுதிகளில் தடவி 15 முதல் 30 நிமிடம் வரை அப்படியே விட்டு பின்பு குளிர்ந்த நீரில் வட்ட வடிவில் ஸ்கரப் செய்து கழுவிக் கொள்ளலாம். இப்படி செய்தால் முகம் பளீச் என்று உடனே மாறும்.
இதையும் படிங்க: முகத்திலுள்ள கரும்புள்ளிகள் நீங்க உருளைக்கிழங்கு போதும்...இது சாத்தியமா?

சோள மாவில் நம் தோலின் இறந்த செல்களை நீக்கக் கூடிய ஸ்டார்ச் உள்ளதால் அது தோலை மிகவும் புதியதாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. வைட்டமின் எ சத்துக்கள் கொலாஜென் அளவை தூண்டச் செய்து சுருக்கங்களை மறைய வைக்கிறது. சூரிய ஒளியால் ஏற்பட்ட சான் பேன், தோல் அரிப்பு மற்றும் தோல் உபாதைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. கோதுமை மாவு முகத்தில் ஆயில், பிசுப் பிசுப்பு தன்மையை நீக்கி உடனே புத்துணர்ச்சியாக மாற்ற உதவுகிறது. பால் இயற்கையான பளபளப்பு தருகிறது. தயிரிலுள்ள லாக்டிக் அமிலம் முகத்தை மிருதுவான சருமமாக வைக்க உதவுகிறது. இந்த பேஸ் பேக் வாரம் ஒரு முறை செய்தாலே போதும்.

சோளமாவு, ஹனி பேஸ் பேக் ;
சோள மாவு - 2 ஸ்பூன்
தேன் - 1ஸ்பூன்
ஒரு சுத்தமான பவுலில் சோல மாவு மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து முகம், கண், கழுத்து பகுதிகளில் தேய்த்து பின்னர் இருபது நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது முகத்தை நன்றாக நீரேற்றம் பெறச் செய்து சுருக்கங்கள் நீங்கச் செய்யும், மிகவும் இளமையான தோற்றம் கிடைக்கும். சோள மாவு இயற்கையான எக்ஸ்போலியன்ட் ஆக செயல்பட்டு பழைய இறந்த செல்களை நீக்கி இரத்த ஓட்டத்தை தூண்டி விடுகிறது. தேனில் ஆன்டி பாக்டீரியல் பண்பு உள்ளதால் தோலில் உள்ள அழுக்குகள், முகப்பருக்களை விரட்ட மிகவும் உதவுகிறது. இதனை வாரம் இருமுறை செய்து வர நல்ல பயனைத் தரும்.

சோள மாவு, கற்றாழை பேஸ் பேக் ;
சோள மாவு - 1ஸ்பூன்
கற்றாழை ஜெல் - 1ஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்
ஒரு சுத்தமான பவுலில் சோள மாவு, கற்றாழை ஜெல், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து, பின்னர் இதனை முகம், கழுத்து பகுதிகளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகம் நல்ல பொலிவோடு அழகாக இருக்கும்.கற்றாழை ஜெலில் உள்ள நீர் சத்து முகத்திற்கு சுருகங்களை மறைத்து நீரேற்றம் பெறச் செய்கிறது. எலுமிச்சை சாறு முகத்திலுள்ள அதிகப்படியான பிசுபிசுப்பை நீக்க பயன்படுகிறது. இதனை வாரம் ஒருமுறை செய்து வரலாம். இந்த எளிமையான வழிகளை வீட்டிலேயே நாம் பின்பற்றி வந்தால் முகத்தை பொலிவுடனும் அழகாகவும் வைக்க முடியும்.
இதையும் படிங்க: தயிர் ஒன்னு இருந்தாலே போதும், ஸ்கின்னு சும்மா மின்னும்...