ஒவ்வொரு முறையும் நாம் கண்ணாடியை பார்க்கும் போது அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். முகம் மற்றும் நெற்றியில் தோன்றும் சுருக்கம் சில நேரங்களில் பெரிய கவலையாக நம்மை ஆட்டிவைக்கும். அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை பார்க்கலாம்.
பத்து பாதாம் பருப்பை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறு நாள் தோல் நீக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சமஅளவு கேரட்டை இதனுடன் சேர்ந்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கற்றாழை ஜெல் ஒரு தேக்கரண்டி சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கலவையை ஒரு சுத்தமான டப்பாவில் போட்டு ஃப்ர்ட்ஜில் வைத்து பாதுகாக்கவும். நாம் வேலை முடிந்து வீட்டில் ஓய்வாக இருக்கும் சமயத்தில் இந்த கலவையை முகம் முழுக்க, கண் உள்பட அனைத்து இடங்களிலும் தடவி விடவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்தாலே சுருக்கங்கள் நீங்கி புசுபுசு கன்னங்களோடு இளமையாக காட்சி தருவீர்கள்.

முகத்தில் சுருக்கம், வறட்சி, கண்களை சுற்றி கருவளையம், கண் எரிச்சல் ஆகிவற்றை எளிதில் சரியாக, தோல் மிருதுவாகவும் இருக்க, ரோஸ் வாட்டர் மிஸ்ட் அதாவது பன்னீரை ஒரு ஸ்பிரேயிங் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு தினமும் காலை மாலை இரு வேளைகளில் முகத்தில் ஸ்பிரே செய்ய வேண்டும். இது முகத்தில் உள்ள சிறிய துவாரங்களை மூடுவதற்கு பயன்படும். ஒவ்வொரு முறையும் ஸ்பிரே செய்யும் போது 2 முதல் 3 முறை இடைவெளிவிட்டு மீண்டும் ஸ்பிரே செய்தால் முகத்தை டோனாக்கி கொடுக்கும். குறிப்பாக முகத்தில் உள்ள சிறிய துவாரங்களை மூடுவதற்கு மிகவும் பயன்படும், சிறிய வயதுடையவர்கள் முதல் பெரியவர்கள் வரை செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பிரபலமாகும் கேரட் ஆயில், உண்மையில் பயன் தருமா ?

ரைஸ் வாட்டர் அதாவது ஊறவைத்து அரிசியில் உள்ள நீரை லேசாக வடிகட்டி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதில் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளதால் முகத்திற்கும் முடிக்கும் நல்ல ஊட்டச்சத்தாக உள்ளது.ரைஸ் வாட்டரை ஒரு பவுலில் எடுத்து சிறிய காட்டன் பஞ்சில் நனைத்து முகம் முழுக்க ஒத்தி எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்யும் போது முகம் க்ளாசி சிகின் போன்ற தோற்றம் தரும்.
1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் அதனுடன் 1தேக்கரண்டி ரோஜா இதழ்களின் பொடி இரண்டையும் நன்றாக கலந்து இதனை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவி வந்தால், முகம் நல்ல நீரேற்றம் பெற்று குளுமையடைவதோடு பொலிவாகவும் இளமையாகவும் இருக்கும்.

2 ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து, முகம் முழுக்க துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு குறைந்தது இரண்டு முறை துடைத்து எடுத்தால் தேவையில்லாத அழுக்குகள் நீங்கி முகம் தெளிவாக இருக்கும். இதனைத் தொடர்ந்து 4 ஸ்பூன் கோதுமை மாவு அதனுடன் காய்ச்சாத பால் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த இந்த கலவையை முகத்தில் தடவி வரவும். மீதமுள்ள கலவையை கழுத்து மற்றும் கை, கால்களில் தடவி காய்ந்தவுடன் ரோஸ் வாட்டரை ஸ்பிரே செய்து ஈரப்படுத்தி பிறகு கழுவி விடலாம். கோதுமை முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்கவும் தேவையில்லாத முடிகளை நீக்கவும் பயன்படும்.
இயற்கையான வழியில் குறைந்த செலவில் வீட்டில் இருந்தபடியே நாம் செய்யும் சில வழிமுறைகள் முகத்தில் சுருக்கம் நீங்கி இளமையான தோற்றம் பெற உதவும்.
இதையும் படிங்க: முகம் பளிச்னு ஆகணுமா? ஆரஞ்சு தோல் போதுமே