மீண்டும் வெடித்தது வடகலை - தென்கலை பிரச்சனை..! ஆண்டு கணக்காய் தொடரும் அட்ராசிட்டி..
காஞ்சிபுரத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் திவ்ய பிரபந்தம் பாடுவதில் வடகலை மற்றும் தென்கலை இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே 108 வேலை தேசங்களில் 44 வது திவ்ய தேசமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோவிலை ஐந்தாண்டுகளுக்கு பிறகு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக திறக்கப்பட்டது. வெள்ளி தகடுகளால் ஆன கதவில் திறக்கப்பட்டு அஷ்டபுஜ பெருமாள் பரமபத வாசல் வழியாக வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்முதல் முறையாக இன்று சொர்க்கவாசல் திறப்பு ஒட்டி அஷ்டபுஜ பெருமாள் ரத்னாங்கி சேவையில் காட்சி காட்சியளித்தார்.
கோவில் முழுவதும் டன் கணக்கில் பூக்கள் மற்றும் படங்களை அலங்கரிக்கப்பட்டு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சொர்க்கவாசல் திறப்புக்கு பக்தர்கள் நள்ளிரவு முதலே காத்திருந்து அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் கோவில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்தநிலையில் சொர்க்கவாசல் திறப்பதற்கு முன்பு வடகலை மற்றும் தெண்களை பிரிவினர் இடையே யார் முதலில் திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக பிரச்சனையை ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றதால், கோவில் நிர்வாகம் சார்பில் வடகலை பிரிவினரை திவ்ய பிரபந்தம் பாட அழைத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உலக ஜீவராசிகளுக்கு உணவளிக்கும் அஷ்டமி சப்பரவிழா..மதுரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
கோவில் ஸ்தானிகராக தென்கலை பிரிவினர் இருந்து வருகின்றனர். நாங்களே இங்கு திவ்ய பிரபந்தம் பாடுவதில்லை. நீங்கள் பாடுவதாக இருந்தால், நாங்கள் பாடிவிட்ட பிறகு நீங்கள் பாடுங்கள் என தென்கலை பிரிவினர் தெரிவித்துள்ளனர் தென்கலை வடகலை பிரிவினர் இடையே, கோவில் வளாகத்திலேயே தகராறு ஏற்பட்டது. வடகலை - தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் சமாதானம் ஆகாததால், இரு தரப்பையும் காவல்துறையினர் பாடல் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றினர். இந்த சம்பவம் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடையே முகசூலிப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?