பணப்புழக்கம் அதிகரிக்கணுமா? படிகாரம் உதவியா இருக்கும்
உங்களுக்கு கண் திருஷ்டி, பண விரையம், செய்யும் தொழி்லில் சுணக்கம், வாஸ்த்து தொடர்பான பிரச்சினைகள் இருக்கா ? அப்போ உடனே படிக்காரக் கல்லை வாங்கி இப்படி பயன்படுத்தி பாருங்க...
மலிவான விலையில் கிடைக்கும் ஆலம் என்று சொல்லக்கூடிய படிகாரக்கல்லை பல்வேறு விதங்களில் பணப்படுத்தி வந்தால் பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் குறிப்பாக, வாஸ்த்து குறைபாடு நீங்கவும், எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட்டு நம் குடும்பத்தை பாதுகாக்கவும், நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரையம் ஆகாமல் நம்மிடமே தங்கவும், பணப் பெருக்கம் உண்டாவதற்கும் , கண்திருஷ்ட்டி நீங்கவும் பயன்படுத்தி வரலாம்.
இயற்கையாகவே கிடைக்கும் இந்த படிகார கல்லில் உள்ள கெமிக்கல் மற்றும் மினரல் மூலக்கூறுகள் எதிர்மறை ஆற்றலை ஈர்த்துக்கொண்டு நேர்மறை ஆற்றலை வெளியிடும் பண்பு கொண்டவையாக உள்ளது. கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வரை ஆண்கள் ஷேவிங் செய்த பிறகு படிகார கல்லை முக்கத்தில் தேய்த்து கொள்ளவார்கள். இது கிருமி நாசினியாக உள்ளது என்று அப்போதே தெரிந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினார்கள். இந்த அளவு நல்ல பண்புகள் கொண்ட படிகாரத்தை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தி வரலாம் என்பதை பார்க்கலாம்.
இதையும் படிங்க: நலம் தரும் கருப்பட்டியை தினமும் இப்படி செய்து சாப்பிடுவோமா?
முதலாவதாக நம் வீடு மற்றும் அலுவலகத்தில் வாஸ்த்து பிரச்சினை இருந்தால் படிகார கல்லை ஒவ்வொரு அறையிலும் சிறிதளவு வைக்க வேண்டும். கண்திருஷ்ட்டி நீங்குவதற்கும் இதேபோன்று படிகாரக்கல்லை வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வைக்கலாம். படிகாரம் எதிர்மறை சக்திகளை ஈர்த்து கொள்வதால் நம் வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும் என்று கூறப்படுகிறது.
ஒரு சின்ன கல் படிகாரத்தை ஒரு டம்பளர் தண்ணீரில் போட்டு, வீட்டு வாசலில் வைக்கலாம். படிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் எண்ணம் சிதறாமல் இருக்க அவர்கள் படிக்கும் அறையில் வைத்து விடலாம்.
உடல்நிலை மோசமாகி, அடிக்கடி நோய் தொற்று ஏற்பட்டு வந்தால் படிகார கல்லுடன் உப்பு, வெண்கடுகு ஆகியவற்றுடன் சேர்த்து 9 முறை ஆன்டி கிளாக்வைஸ் முறையில் சுற்றி படிகாரத்தை மட்டும் எடுத்து தனியே வைத்து விட்டு உப்பு, வெண்கடுகை நெருப்பில் போடவும். இப்படி செய்தால் நல்ல உடல் ஆரோக்கியம் மேம்படும். அந்த படிகாரத்தை மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நாம் குளிக்கும் தண்ணீரில் 1 ஸ்பூன் படிக்காரத்தூளை சேர்த்து பயன்படுத்தி வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும். மேலும், 1 டம்பளர் தண்ணீரில் சிறிதளவு இட்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கி வாய் புண் சரியாகும். வீடு துடைக்கும் போது 1ஸ்பூன் படிக்காரத்தூளை பயன்படுத்தி வீடு துடைத்து வந்தால் பூச்சிகள் தொல்லை இல்லாமல் வீடு சுத்தமாக இருக்கும். வீட்டு வாசலில் படிகார கல்லை கருப்பு நிற கயிற்றால் கட்டி தொங்கவிட எதிர்மறை சக்திகளை ஈர்த்துக்கொண்டு நம் இல்லத்தை பாதுகாக்கும்.
நல்ல பணப்புழக்கம் ஏற்பட நாம் பணம் வைக்கும் பீரோவின் நான்கு தூண்களில் இந்த படிகார கல்லை சிறு துண்டுகளாக போட்டு வைக்கலாம். எக்காரணத்தை கொண்டும் பீரோவின் உள்ளே உள்ள பணப்பெட்டியில் வைக்கக் கூடாது. இனம்புரியாத பயத்திலிருந்து விடுபடவும் கெட்ட கனவுகளில் இருந்து விடுபடவும் ஒரு சிறிய கருப்புத் துணியில் சிறிதளவு படிகாரத்தை போட்டு ஒரு சிறிய மூட்டையாக கட்டி நாம் படுக்கும் தலையணையின் அடியில் வைத்து படுத்து வரவும்.
நம் முன்னோர்கள் படிக்கார கல்லை பல்வேறு விதங்க்ளில் பயன்படுத்தி அதன் முழு பயனையும் பெற்று வந்தார்கள். அவற்றுள் சில குறிப்புகளை மட்டுமே இங்கே பார்த்தோம் அதனை இயன்றவரை நாமும் பின்பற்றி பயன் அடையலாம்.
இதையும் படிங்க: வண்டி ஓட்டும்போது மொபைலை பயன்படுத்துபவர்களே உஷார்.. அபராதம் எவ்வளவு தெரியுமா?