சமூக வலைதளங்களின் தாக்கத்தால் இளம் வயதினர் காதல் வலையில் சிக்கி, தங்கள் வாழ்வையே அழித்துக் கொள்கின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் தமிழகத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் பெற்றோர் இறந்துவிட்டனர். எனவே, தாத்தா உடன் வசித்து வந்தார். இவருக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சாதாரண பழக்கம் காதலாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் 2024இல் காதலர் தினத்தன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் காதலனை நேரில் சந்திக்க சிறுமி முடிவு செய்தார். இதனால் பிப்ரவரி 14 அன்று திருப்பூரில் உள்ள தன் தாத்தா வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி, காஞ்சிபுரத்திற்கு வந்தார். அங்கு சிறுவனைச் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே
சிறுமியின் தாத்தாவுக்கு உடல் நிலை சரியில்லை என்கிற தகவல் சிறுமிக்கு தெரிய வந்தது. இதையடுத்து, அடுத்த சில நாட்களில் தாத்தாவை பார்க்க சிறுமி திருப்பூர் வந்தார். அப்போதுதான் சிறுமிக்கு திருமணமானது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்துக்கும் தெரிய வந்தது. இத்திருமணம் தொடர்பாக குழந்தை பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் திருப்பூர் மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்தப் புகாரின்படி போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக திருப்பூரில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. திருமணம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் சிறுவனும் சிறுமியும் திருமணம் செய்துகொண்டிருப்பது இளைய தலைமுறையினரின் எதிர்காலம் குறித்த அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்டா மூலம் கஞ்சா சேல்ஸ்! கோடு வேர்டு சொன்னால் தான் பொட்டலம்..! சிக்கிய வாலிபர்கள்..!
இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி பலமுறை சீரழித்த இளைஞன்.. உயிருக்கு போராடும் இளம்பெண்.. ஒருதலைபட்சமாக நடக்கும் போலீஸ்..?