சேலம் மாவட்டம் துட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் அவரது நண்பரான நரசிம்மன் என்பவருடன் டிராக்டரில் சேலத்திலிருந்து கோயம்புத்தூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கலியனுர் பிரிவு அருகே தர்பூசணி ஏற்றிக்கொண்டு பின்னால் சென்ற சரக்கு வேன் டிராக்டரில் மோதியுள்ளது. இதில் டிராக்டரில் பயணம் செய்த மாதேஷ் மற்றும் நரசிம்மன் தூக்கி வீசப்பட்டது சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வேன் ஓட்டுனரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முன்னதாக தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பறந்து பள்ளத்தில் பாய்ந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்..!
இதையும் படிங்க: இறப்பிலும் இணைபிரியா நண்பர்கள்.. சோகத்தில் மூழ்கிய கல்லூரி நிர்வாகம்..