கடலூர் மாவட்டம் கே என் பேட்டையைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் ரஞ்சிதா தம்பதியினருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் ரஞ்சிதாவை மைக்கேல்ராஜ் அடித்து துன்புறுத்தியதாக தெரியவந்தது.
முன்னதாக, திருமணத்தின் போது ரஞ்சிதாவின் பெற்றோர் ரஞ்சிதாவிற்காக 10 சவரன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்களை மகளுக்கு சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். ஆனால் ஏனோ மைக்கேல் ராஜ் அதனை ஏற்றுக் கொள்ளாமல் தனக்கு 2 லட்சம் ரூபாய் அதிகமாக வேண்டும் என ரஞ்சிதாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மைக்கேல் ராஜ் திருமணத்திற்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்த மைக்கேல் ராஜ் மனைவியின் பெற்றோரிடம் பணம் வாங்கி வரச் சொல்லி ரஞ்சிதாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ‘நாங்கள் அப்பாவி..! குஜராத் கலவரம் தொடர்பாக தவறான கதைகள் பரப்பப்பட்டன’.. பிரமதர் மோடி ஓபன்டாக்..!
முன்னதாக மைக்கேல்ராஜ் மட்டும் இன்றி அவரது சகோதரி நித்திஷா மற்றும் மாமா சந்தோஷ் குமார் ஆகியோரும் கொடுமைப்படுத்தி மிரட்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஞ்சிதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் நாளை பூமிக்கு திரும்புகிறார்கள்.. நாசா அறிவிப்பு..!