லடாக் யூனியன் பிரதேசமான கார்கிலில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.2 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீரிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று அதிகாலை 2.50 மணிக்கு 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள லே மற்றும் லடாக் இரண்டும் நாட்டின் நில அதிர்வு மண்டலம் IV-ல் அமைந்துள்ளன. இதனால் இவை அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு உள்ளாகின்றன.
இதையும் படிங்க: நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! பீதியில் மக்கள்...

கார்கிலுக்கு வடக்கே 191 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் அமைந்திருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகளில் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படவில்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலத்தில் ஏற்பட்ட பூகம்பங்கள் மற்றும் பிராந்தியத்தின் டெக்டோனிக் அமைப்பு தொடர்பான அறிவியல் உள்ளீடுகளின் அடிப்படையில் நாட்டின் பூகம்ப பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த உள்ளீடுகளின் அடிப்படையில் இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) நாட்டை நான்கு (5, 4, 3 மற்றும் 2) நில அதிர்வு மண்டலங்களாக வகைப்படுத்தி உள்ளது. மண்டலம் 5 மிகஉயர்ந்த அளவிலான நில அதிர்வு கொண்டது அதே நேரத்தில் மண்டலம் 2 மிகக் குறைந்த அளவிலான நில அதிர்வுடன் தொடர்புடையது.
கடந்த மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி அதிகாலையில் அசாமின் மோரிகான் மாவட்டத்தில் 5.0 ரெக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கௌஹாத்தி மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தின் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?
நிலநடுக்கத்தின் போது "அமைதியாக இருங்கள்" என்ற வார்த்தை எந்த அளவுக்கு உயர்ந்ததாக தோன்றினாலும் பூமி அதிர்ச்சி வருவதை உணரும் போது அது மிகவும் முக்கியமானது. நீங்கள் உண்மையிலேயே அதை செய்ய முடிந்தால் மற்றவர்களுக்கும் உறுதி அளிக்கவும்.

பூகம்பத்தின் போது பாதுகாப்பான வழி திறந்த வெளியில் இருப்பது தான். முதலில் கட்டிடங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இருப்பினும் இது போன்ற சூழ்நிலைகள் அதிகரிக்கும் வேகத்தை கருத்தில் கொண்டு அது எப்போதும் சாத்தியமான விருப்பமாக இருக்காது. வீட்டிற்குள் இருந்தால் மேஜை அல்லது படுக்கை போன்ற தளவாடங்களின் கீழ் தஞ்சம் அடையுங்கள். கண்ணாடி கதவுகள் ஜன்னல்கள் மற்றும் வெளிப்புற கதவுகளை தவிர்க்கவும். உங்கள் கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல முயற்சிக்கும் போது நெரிசல் போன்ற சூழ்நிலைகளும் ஏற்படலாம்.
குறிப்பாக வீடுகளுக்குள் சமையலறை எரிவாயுவை கவனமாக பரிசோதிக்க வேண்டும். அடுப்பு எரிந்து கொண்டிருந்தால் எரிவாயு விநியோகத்தை அணைத்து விட வேண்டும். அதே நேரத்தில் எரிவாயு கசிவு ஏற்படுவதாக சந்தேகம் இருந்தால் மின் சுவிட்ச் அல்லது சாதனங்களை இயக்க வேண்டாம் என தேசிய நில அதிர்வு மையம் அறிவுரை வழங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: உத்தரகண்ட்டை அதிர வைத்த நிலநடுக்கம்… கதறித் துடித்து ஓடிய மக்கள்..!