வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை(10ம் தேதி) துவங்கி 19ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்து இருக்கும். ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்து ஏழுமலையான வழிபட இலவச தரிசன டோக்கன்களை வழங்க திருப்பதியில் 8 இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்திலும் தேவஸ்தான நிர்வாகம் 94 கவுண்டர்களை அமைத்துள்ளது. அந்த கவுன்டர்களில் இன்று அதிகாலை 5 மணி முதல் இம்மாதம் 10, 11, 12 ஆகிய நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவித்தது.திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பைராகி பட்டிடையில் அமைக்கப்பட்ட கவுன்டரில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்களும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றனர். நெரிசலில் சிக்கியவர்கள் கதறித் துடித்ததால் அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது. இதில், சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உயிரிழந்தார். பலருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது.அதேபோல் திருப்பதி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சீனிவாசம் வளாகம் பகுதியில் அமைக்கப்பட்ட கவுன்டரிலும் கடும் நெரிசல் ஏற்பட்டது. இருவேறு இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் எதிரொலி .. திருப்பதியில் மாஸ்க் கட்டாயம் .. தேவஸ்தான அறங்காவலர் குழு அறிவிப்பு ..!

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டு பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் . சேலத்தை சேர்ந்த மல்லிகா (40) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.அதேபோல் மற்றொரு பெண் பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.திருப்பதி கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் பற்றி திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனை முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்வர், பைராகிபட்டுடடையில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டரில் பணியில் இருந்தவர்கள், மெயின் கேட்டை திடீரென்று திறந்து விட்ட காரணத்தால் பக்தர்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டு உள்ளே செல்ல முயன்றனர். அதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கேட்டை திறந்து விட்ட போலீஸ் டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த சம்பவத்தில் மொத்தம் 40 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் ஆறு பேர் மரணம் அடைந்து விட்டனர்.
மீது உள்ள 34 பேரில் ஆறு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுகின்றனர் என்றார்
இதையும் படிங்க: கோடீஸ்வர சாமியை பார்க்க.. 5 கிலோ நகை அணிந்து வந்த நபர் .. வியந்து பார்த்த பக்தர்கள் ..!