சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை முயற்சி, அடிதடி, திருட்டு, வழிப்பறி என ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
என்ன நிலையில் ரௌடி அருண்குமார் கடந்த 14ஆம் தேதி பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பிரியாணி கடை அருகே மது வாங்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் அவரை கத்தியால் சரமாரியாக வட்டி கொலை செய்தனர்.
தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த அருண்குமாரின் உடலை கைப்பாற்றி உடற் கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி வந்தனர்.
இதையும் படிங்க: குழந்தை என்றும் பாராமல் தந்தை செய்த கொடூரம்.. பரபரப்பு வாக்குமூலம்!

தொடர்பு போல சில பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி அதன் காட்சிகளை ஆய்வு செய்த போது இரண்டு இரு சக்கர வாகனங்களை ஆய்வு செய்து, உலகில் தொடர்புடைய ஆறு பெயரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிமியோன் ஜோஸ்வா சிக்கந்தர் ராஜேஷ் மற்றும் 17 வயது உடைய இரண்டு சிறுவர்கள் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் கொலையில் சம்பந்தப்பட்ட ராஜேஷ் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, கொலை செய்துவிட்டு அனைவரும் ராமநாதபுரம் தப்பி சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் போலீசாரின் ஆலோசனைப்படி ராஜேஷ் அனைவரிடத்திலும் பேசி சென்னை வரவழைத்த நிலையில் போலீசார் அனைவரையும் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து, தப்பி ஓட முயன்ற ஆறு பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி சிறுவர்கள் இருவரும் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் மற்றும் நான்கு பேரும் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை.. குற்றவாளிகளுக்கு வலைவீச்சு..!