அமெரிக்காவின் FBI தலைவராக பதவியேற்றுள்ள இந்திய குஜராத் வம்சாவளியைச் சேர்ந்த காஷ்யப் பட்டேல் தனது அதிரடி ஆட்டங்களை தொடங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள கடத்தல்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு அவர் நேரடியாக விடுத்த எச்சரிக்கையை அடுத்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காஷ்யப் பட்டேல், அமெரிக்காவுக்கு துரோகம் செய்யும் அல்லது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தட்டித் தூக்கப்படுவீர்கள் என சினிமா பாணியில் நேரடியாக எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.300க்கு போதை மாத்திரை விற்பனை? மும்பையில் இருந்து கடத்தி வந்த கும்பல்.. சுத்துப்போட்டு பிடித்த போலீசார்..!
இந்த நிலையில் தான் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த ஏழு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவர்களை கைது செய்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தியுள்ளார். எப்.பி.ஐ புதிய தலைவராக பொறுப்பெற்றுள்ள காசியப் பட்டேல் இது உலகம் முழுவதும் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடுநடுங்க செய்துள்ளது.

கொலம்பியாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட போதை கடத்தல் கும்பல் தலைவர்கள் ப்ளோரோடவிலுள்ள சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாக ஆயிரக்கணக்கான தன் எடையுள்ள போதைப் பொருட்களை கடத்தியதை ஒப்புக்கொண்டனர். அமெரிக்காவின் பல நகரங்களில் உள்ள தெருக்களில் போதைப் பொருட்கள் புழக்கத்திற்கு இவர்கள்தான் காரணம் என கூறப்பட்டு வந்தது.
FBI இன் டாம்பா அமைப்பு மற்றும் சட்ட அமலாக்க துறையினருடன் சேர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலம்பியாவிலிருந்து கோகையின் மற்றும் பென்டானில் உள்ளிட்ட பல போதை பொருட்கள் டன் கணக்கில் பல வருடங்களாக கடத்தப்பட்டு, அமெரிக்காவின் லட்சக்கணக்கான இளைஞர்களை போதையின் பிடியில் சிக்க செய்துள்ளதில் கைது செய்யப்பட்ட இந்த ஏழு பேரின் பங்கு அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள போதை கடத்தல் கும்பலை தட்டித் தூக்கும் பணியில் காஷ்யப் பட்டேல் இறங்கி உள்ளதால் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் போதையின் பிடியில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாகும் என்றும் தெரிகிறது.
இதையும் படிங்க: பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மதபோதகர்! லாடம் கட்டிய போலீஸ்..!