ஆந்திர மாநிலம் சித்தூர் காந்தி சாலையில் உள்ள ஐடிபிஐ பேங்க் அருகே, பிரபல கிட்ஸ் பேஷன் பேன்சி ஷாப் கடை உரிமையாளர் சந்திரசேகர் வீடு உள்ளது. இவரது வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை 7 மணி அளவில் 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் புகுந்து கொள்ளை அடிக்க முயன்றது. அப்போது சந்திரசேகர் கத்தி கூச்சலிட முயற்சி செய்தார். அப்போது சந்திரசேகரை கொள்ளை கும்பல் இரும்பு ராடால் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். ரத்த காயத்துடன் வீட்டின் இருந்து கூச்சலிட்டு கொண்டே ஒரு அறையில் குடும்பத்துடன் சென்று உள் தாழ்ப்பாள் போட்டு கொண்டார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அக்கம் பக்கத்தினருக்கும் போன் செய்து நடந்ததை தெரிவித்தார். உடனே அவரது வீட்டிற்கு வெளியே பக்கத்து வீட்டுக்காரர்கள் திரண்டனர். வெளியே இருந்த பொதுமக்கள், இளைஞர்கள் கொள்ளையர்கள் இருந்ததை கண்டு உள்ளே சென்று அனைவரையும் சுற்றி வளைத்து அடித்து 6 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இருவர் வீட்டில் இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் வீட்டை சுற்றி வளைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் கொள்ளை கும்பலில் ஒருவன் தப்பி சென்றது தெரிய வந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் தப்பிச் சென்றவரையும் போலீசார் பிலேரூ சாலையில் கைது செய்தனர்.
இதையும் படிங்க: குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்.. தோப்புக்கரணம் போட்டு தன்னை தானே தண்டித்த ஆசிரியர்..!

மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்து அவர்கள் கொள்ளையடிக்க கொண்டு வந்த பையில் மூன்று ரப்பர் துப்பாக்கிகள் மற்றும் இரண்டு சிறிய கத்திகள், ஒரு மிளகாய்ப் பொடி மற்றும் நான்கு தோட்டாக்கள் மற்றும் நான்கு இரும்பு துகள்கள், ஒரு கார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது கர்னூல் மாவட்டம் நந்தியாலா நகரம், சாய்பாபா நகர் பகுதியை சேர்ந்த சுப்ரமணியம் (வயது 52) என்பது தெரிந்தது. இவர் மீது ஆள் கடத்தல் கொலை முயற்சி உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சித்தூர் நகரில் குடியேறி பர்னிச்சர் கடை நடத்தி வந்துள்ளார்.


இவருக்கு வியாபாரத்தில் கடன் அதிகமானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும், தொழில் போட்டி காரணமாகவும் மற்றொரு வியாபாரியான பேன்சி ஷாப் கடை உரிமையாளர் சந்திரசேகரிடம் கொள்ளையடிக்க முடிவு செய்தார். சந்திரசேகரிடம் அதிக அளவில் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட சுப்ரமணியம் அதனை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார். இதற்காக கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்த இப்ராஹிம், பொதுட்டூர் நந்தியாலாவை சேர்ந்த நவீன் குமார், பர்மாஷாலா, அனந்தபூரை சேர்ந்த இராமாஞ்சநேயுலு, ராஜசேகர், நெட்டி கந்தையா, கர்னூலை சேர்ந்த சம்பத் குமார் ஆகியோருடன் ரப்பர் குண்டு துப்பாக்கி, கத்தியை கொண்டு கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. இவர்கள் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்து அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதாக சித்தூர் எஸ்.பி.மணிகண்டா தெரிவித்தார்.
இதையும் படிங்க: வங்கியை கொள்ளையடிக்க திட்டம்? துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த கொள்ளையர்கள்.. ஆந்திராவில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்..!