நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன், தானும் அதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் என்றாலே பிரச்சனை தான் ப்ரோ என்று சொல்ற அளவுக்கு பலரது திருமண வாழ்க்கை இருந்து வருகிறது. சின்ன சின்ன சண்டைகள் கூட பூதாகரமாகி விவாகரத்து, கொலை வரை செல்வது வழக்கமாகி வருகிறது.
அந்த வகையில் கோவையில் மனைவி மீது ஆத்திரப்பட்ட கணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவருக்கு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. கிருஷ்ணகுமார் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் சங்கீதா தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு வந்த கிருஷ்ணகுமார் குடும்பத்துடன் இருந்துள்ளார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. கணவன் – மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் சந்தேகம். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கிருஷ்ணகுமார் இது குறித்து கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையில் சங்கீதா புதூரிலும், கிருஷ்ணகுமார் கேரளாவிலும் வசித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: பெற்ற மகனுக்கே எமனாக மாறிய தாய்...ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!
இந்த நிலையில் மனைவியை பார்க்க பட்டணம் புதூருக்கு கிருஷ்ணக்குமார் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால், கோபமான கிருஷ்ணகுமார் தன்னிடம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சங்கீதாவை சுட்டுள்ளார். அவரது மார்பு பகுதியில் குண்டு பாய்ந்ததில் சங்கீதா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

பின்னர் ஒரு போர்வையை எடுத்து மனைவியின் உடலில் போர்த்தி விட்ட கிருஷ்ணகுமார் பட்டணம் புதூரில் இருந்து கிளம்பியுள்ளார். நேராக கேரளாவில் உள்ள தனது தோட்டத்து வீட்டுக்கு சென்ற அவர், மனைவியை சுட்டு கொன்ற அதே துப்பாக்கியால் தானும் சுட்டு கொண்டு தற்கொலை செய்தார். இதற்கிடையே சங்கீதா இறந்தது குறித்து தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகுமாரின் செல்போனுக்கு சூலூர் போலீசார் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசிய கேரள போலீசார் கிருஷ்ணகுமார் தற்கொலையை கூறியுள்ளனர். இறப்பதற்கு முன்பு தனக்கும், தனது மனைவிக்கும் ஏற்பட்ட சண்டை குறித்து கிருஷ்ணகுமார் வாட்சப் மூலம் வீட்டின் அருகே வசிப்பவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: 6 வயது மகனை துடிக்க துடிக்க கொன்ற தாய்.. மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரம்.. ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு..!