இந்தியாவின் லாட்டரி கிங் எனப்படும் சாண்டியாகோ மார்ட்டின் குடும்பத்தில் தற்போது பூகம்பம் வெடித்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரிவு தலைவரும் மார்ட்டினின் மருமகனுமான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அவரது மச்சானும் லாட்டரி அதிபருமான, ஜோ சார்லஸ் களத்தில் குதித்துள்ளார். இதுதான் தற்போதைய பரபரப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

அந்தமானில் பிறந்த சாண்டியாகோ மார்ட்டின் தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு ராமநாதபுரத்தைச் சேர்ந்த லீமாரோஸ் என்ற உடையார் கிறிஸ்துவ பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஜோ சார்லஸ் மற்றும் டெய்சி மார்ட்டின் என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வக்கீல் சடலம்.. தலையில் பதிந்திருந்த அரிவாள்.. விருகம்பாக்கத்தில் பயங்கரம்..!
டெய்சி மார்ட்டின் திருச்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா என்ற தேசிய அளவிலான கூடைப்பந்து வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு லாட்டரி அதிபர் மார்ட்டினின் குடும்பத்தில் ஒரு முக்கிய உறுப்பினராகி போனார் கூடைப்பந்து வீரர் ஆதவ் அர்ஜுனா.

ஆதவ் அர்ஜுனா டெய்சி மார்டின் திருமணம் நடந்து பல ஆண்டுகளான நிலையில், திமுகவில் அரசியல் வியூக பிரிவில் பணிபுரிந்து வந்தார் ஆதாவ் அர்ஜுனா. பின்னர் விசிக கட்சியில் திருமாவளவனுக்கு அடுத்த நிலையில் உள்ள பதவி வகித்து வந்தார்.
தனது வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் மேடையில் பேசிய பேச்சுக்களால் கடுப்பாகி போன திமுக ஆதவ் அர்ஜுனாவை விசிகவில் இருந்து நீக்கும் வரை ஓயவில்லை, பல சங்கடங்களுக்குப் பிறகு தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
விஜய் கட்சியில் சேர்ந்த பிறகு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் எதையாவது பேசி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் ஆதவ் அர்ஜுனா. தனது மாமனார் செய்து வரும் தொழில்களில் லாட்டரியும் ஒன்று. அதற்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசையும் மாநில அரசையும் சேர்ந்த தலைவர்களை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா நேரடியாக விமர்சித்து வருவது லாட்டரி மார்ட்டின் குடும்பத்தை கதி கலங்க செய்துள்ளது.

இதனை அடுத்து லாட்டரி மார்ட்டின் மகன் ஜோ சார்லஸ் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஒரு வழி செய்து விடுவேன் என்றும் மிரட்டியும் உள்ளார்.
"தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக பாஜக தலைவர் திரு.கே. அண்ணாமலைக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கு எனது ஆட்சேபனையையும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறேன். "அவர் தனது மாமனார் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார், எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகிறார்" என்ற அவரது கூற்றையும் நான் ஆதரிக்கிறேன்.
பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி வைத்து கொண்டு தனது அரசியல் மற்றும் நிதி பேராசையை பூர்த்தி செய்ய சீரற்ற அரசியல் கட்சிகளில் சேர்ந்து பிரச்சனை ஏற்படுத்துகிறார்

அவரது முட்டாள்தனத்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், அவரது செயலால் மேலும் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதையும் தெளிவுபடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன், என லாட்டரி மார்ட்டின் மகன் அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்
லாட்டரி அதிபர் மார்ட்டினின் இந்த அறிக்கை மார்ட்டின் மற்றும் அவரது மனைவியின் அறிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ஒன்று குடும்பத்தில் விரிசல் அல்லது இனி துடுக்கான வார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு அமைதியான அரசியல் செய்வது என ஏதேனும் ஒரு வழி தான் ஆதார்ஜுனாவுக்கு இருக்க முடியும் என்கிறார்கள் இந்த அறிக்கை படித்துப் பார்த்த அரசியல் வல்லுநர்கள்.
இதையும் படிங்க: முதல்வர், கனிமொழி எம்.பி. குறித்து அவதூறு ... 'குடி' மகன்களை கொத்தாக தூக்கிய போலீஸ்!