அமெரிக்காவில் பெண்களின் வாழும் காலம் 80 ஆண்டுகளாக உள்ளது. ஆண்கள் 75 ஆண்டுகள் வாழ்வதாக கூறப்படுகிறது. இதுபற்றி சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியையான டாக்டர் டேனா துபால் கூறும்போது, இது உலகம் முழுவதும் புரிந்து கொள்ளப்படாதது இயற்கையாகவே காணப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்படுதல், பஞ்சம், பெருந்தொற்றுகள் மற்றும் பட்டினி ஏற்படும் காலங்களில் கூட பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஆண்களுடன் ஒப்பீட்டால், குறைவான சுகாதார சுழற்சி காலங்களையே பெண்கள் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வயது முதிர்ந்த காலத்தில், ஆண்களை விட பெண்கள் உடல் ரீதியாக துன்பங்களை எதிர்கொள்பவர்களாகவும், உடலில் எதிர்ப்பாற்றல் குறைந்து பாதுகாப்பற்றவர்களாகவும் உள்ளனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்காக பெண்களால், பிங்க் நிற ஆட்டோக்கள்... தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
பெண்களுக்கு மெனோபாசுக்கு பின்னர் வயது முதிர்வால் இதய பாதிப்பு, அல்சீமர்ஸ் எனப்படும் ஞாபக மறதி வியாதிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என ஆய்வறிக்கை கூறுகிறது. எனினும் பெண்களின் வாழ்நாள் அதிகரிப்புக்கு மரபணு மாற்றங்கள், ஹார்மோன்கள், வாழ்க்கை முறை மற்றும் செயல்படும் முறை ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன.

இதில் குறிப்பிடும்படியாக, 2 X குரோமோசோம்கள் கொண்ட பெண்களுக்கு அதிக வாழ்நாளுக்கான சாத்தியமும், X மற்றும் Y குரோமோசோம்கள் கொண்ட ஆண்களுக்கு குறைவான வாழ்நாளும் உள்ளது எலிகளிடம் நடத்திய ஆய்வில் தெரிய வஒந்துள்ளது. இந்த ஆய்வு மனிதர்களுக்கும் பொருந்த கூடும் என பேராசிரியையான ஆய்வாளர் துபால் கூறுகிறார். ஹார்மோன்களை எடுத்து கொண்டால், பெண்களுக்கான ஈஸ்டிரோஜன் ஹார்மோன் அவர்களுடைய வாழ்நாள் நீட்டிப்பை அதிகரிக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
இதையும் படிங்க: பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. இனி கீழ் பெர்த்தில் பயணம் செய்யலாம்.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு.!