நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒரு சீமானுக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு வளராக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கூறி சீமான் சென்னை மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில் 2011 ஆம் ஆண்டு அளித்த புகாரை 2012 ஆம் ஆண்டிலேயே திரும்ப பெற்றுக் கொள்வதாக விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும் விசாரணையின் அடிப்படையிலும் போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்பொழுது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபொழுது காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்க வைக்கப்பட்டது வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக விஜயலட்சுமி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

அதன் பிறகு வழக்கு பட்டியலிடப்படவில்லை, இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ஜிகே இளந்தரையின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு வழங்கிய புகாரை திரும்ப பெற்றுக்கொண்டதாகவும் பின்னர் 2023ல் கொடுக்கப்பட்ட புகாரையும் திரும்ப பெற்றுக்கொண்டதாகவும் விஜயலட்சுமி திரும்ப பெற்றுக்கொண்டதாகவும் கூறினார் . தூண்டுதலின் பெயரில் தான் இந்த புகார் கொடுக்கப்பட்டதாகவும் எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு என்றும், ஏற்கனவே இதுகுறித்து விஜயலட்சுமி வாக்கு மூலம் அளித்துள்ளார் என்றும் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். காவல்துறையிடம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி விஜயலட்சுமி கேட்டுக்கொண்டதை சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் தங்களது விசாரணையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருவருக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும் ஆனால் 2011 ஆம் ஆண்டுதான் இந்த விவகாரம் வெளிவந்ததாகவும் காவல்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எதற்காக விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்ப பெற்றார்?, வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமை விசாரிக்க அதிகாரம் உள்ளது எனத் தெவித்தார். இந்த வழக்கை சர்வசாதாரணமாக கடந்துவிட முடியாது என தெரிவித்திருக்கும் நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது எனக்கூறி விசாரணையை 12 வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.