தவெகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவு ஆலோசனை கூட்டம் சோழிங்கநல்லூரில் நடைபெற்றது. ஓஎம்ஆர் சாலையில் உள்ள கைலாஷ் கார்டனில் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெயபிரகாஷ்,உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, பேச்சால் வளர்ந்த திமுகவிற்கு பேச்சாலேயே தான் அழிவு என கூறினார். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி சிறைக்குச் செல்வது உறுதி என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சரே சிறைக்குச் செல்லும் நிலையில் திமுகவின் பிரச்சார பீரங்கி கிருஷ்ணமூர்த்தியின் நிலைமை எல்லாம் என்னவாகும் என்று புகைப்படத்தை காண்பித்து பேசினார்.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்திற்கு குழி பறிப்பு... யார் அந்த கறுப்பு ஆடு?... ஈசிஆர் சரவணன் பரபரப்பு பேட்டி...!
இதையும் படிங்க: பொன்முடிக்கு எதிரான போராட்டம்; அதிமுகவினர் போலீஸ் இடையே தள்ளுமுள்ளு!