விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அதிமுக கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் முக்குராந்தல் பகுதியில் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக கழக மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள், மணிமேகலை, ராஜவர்மன், எஸ்.ஜி. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறையினர் அதிமுகவினரை கைது செய்ய முற்பட்டபோது அதிமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பிரதான சாலையில் கைதுக்கு பயந்து ஓடிய அதிமுகவினர் காரில் ஏறி பறந்தனர். மேலும் காவல்துறையினர் படையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்கு பதிவும் செய்துள்ளனர்.சாத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திருமாவை விடுங்க.. என் எதிரியை நான் கருவில் இருக்கும்போதே தீர்மானித்து விட்டேன்- சீமான் திட்டவட்டம்..!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக பொன்முடி மீது மிகப்பெரிய சர்ச்சை என்பது எழுந்தது. விலைமாதுவும் சைவ, வைணவ சின்னத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதனையடுத்து பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவரே பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தார். இருப்பினும் அதிமுக மகளிர் அணி சார்பில் பொன்முடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்... கோடநாடு வழக்கை குடையும் சி.பி.சி.ஐ.டி!!