மகளிர் விடியல் பயணம் தொடர்பாக அமைச்சர் பொன்முடி பேசியது ஏற்கனவே சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் சமய குறியீடுகளை கொச்சையாக பேசியிருப்பது மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி விலைமாது-உடன் சமய நம்பிக்கைகளை ஒப்பிட்டு பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது.
விலை மாது வீட்டில் சைவமா வைணவமா என கேட்கிறார்கள்…என்று ஆரம்பித்து பேசிய அமைச்சர், சைவ குறியீடுகளை மிகவும் தரை குறைவாக விலைமாது உடன் ஒப்பிட்டு பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மிகவும் தரக்குறைவாக அமைச்சர் பொன்முடி பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்கு கடும் கண்டனம் எழுந்தது. ஒரு அமைச்சர் இப்படியா மேடையில் பேசுவது என பலரும் எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளனர்.
பொன்முடியின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பொன்முடி விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ், டிடிவி தினகரனை கை கழுவுகிறதா பாஜக.? எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி வியூகம்!!

அதுமட்டுமல்லாது பொன்முடியின் பேச்சுக்கு கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார். எந்த சூழ்நிலையில் பேசி இருந்தாலும் தவறுதான் என்று கனிமொழி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே வரும் 16ஆம் தேதி மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களுக்கு துரோகம்.. அதிமுகவை ரவுண்டு கட்டிய கனிமொழி.!