நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு, பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து அமர்ந்திருக்கின்றனர். திமுக அரசு தாக்கல் செய்ய உள்ள 5-வது வேளாண் பட்ஜெட் இதுவாகும்.

முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம் ரூ. 146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ. 269 கோடியில் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இத்திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடிதூள்... விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.2000 நிதி... வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு...!

1000 இடங்களில் 'முதலமைச்சர் உழவர் நல சேவை மையம்' அமைக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நிதி உதவி ரூ. 2,500ல் இருந்து ரூ. 10,000 உயர்த்தப்பட்டுள்ளது என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா...? காத்திருக்கும் விவசாயிகள்..!