சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அஜித்குமார். இவரது படங்கள் ரிலீஸ் ஆனாலே ரசிகர்கள் மத்தியில் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும். கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. இதுமட்டுமல்லாது பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, மாநில அரசின் விருதுகள் என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். சர்வதேச அரங்கிலும், எஃப்ஐஏ போட்டிகளிலும் பங்கேற்ற இந்தியர்களில் இவரும் ஒருவர்.

சினிமா மட்டுமல்லாமல் கார் ரேஸ்சிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி அசத்து வருகிறார் அஜித். முதற்கட்டமாகக் கடந்த ஜனவரி மாதம் நடந்த 24 மணி நேர கார் ரேஸில் அவரது அணி பங்கேற்றது. அதில் மிகச் சிறப்பாக அஜித்குமார் அணி செயல்பட்ட நிலையில், 3வது இடத்தை பிடித்தது.
இதையும் படிங்க: வரலாறு படைத்த 10 வயது ஜம்மு காஷ்மீர் சிறுமி.. எப்1 அகாடெமிக்கு தேர்வாகிய ஆசியாவில் முதல் பெண்..!

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக துபாயில் தங்கி பயிற்சி மேற்கொண்ட அஜித், கார் ரேஸ் பயிற்சியின் போது அவரது கார் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து ரேஸில் பங்கேற்ற நிலையில் அவரது அணி 3 வது இடத்தை பிடித்தது.

தற்போது, இத்தாலி நாட்டில் நடந்த கார் ரேஸிங்கிலும் அஜித்குமார் அணி பங்கேற்றது. 12 மணி நேரம் தொடர்ந்து கார் ஓட்டும் பந்தயத்தில் அஜித் அணி பங்கேற்றது. இதில் அவரது அணி 3வது இடத்தை பெற்று அசத்தியுள்ளது.அஜித்தின் டீம் இந்த ரேஸில் GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதித்து உள்ளது.

12 ஹவர்ஸ் ஆஃப் முகெல்லோ கார் ரேஸில் அஜித் அணி வெற்றி பெற்ற நிலையில் சக வீரர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது, வைரலாகி வருகிறது.கார் ரேஸில் கலக்கி வரும் அஜித்திற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்.. அதிரடி காட்டிய போலீசார்..!