ஆந்திர பல்கலைக்கழகங்களில் பல மொழிகள் கற்பிக்கும் மையங்களை உருவாக்க அம்மாநில அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இது தொடர்பாக ஒப்புதல் பெறுவதற்காக சந்திரபாபு நாயுடு டெல்லி சென்றுள்ளார். இதுதொடர்பாக சந்திரபாபு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குஜராத் மாநிலத்தில் இதைச் சிறப்பாக அமல்படுத்தியுள்ளனர். தற்போது ஆந்திர சட்டசபையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது, ஒப்புதல் பெறவே டெல்லிக்கு வந்துள்ளோம். விரைந்து இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுள்ளேன்" என்று அவர் கூறினார்.

மேலும் அவர் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார். "ஒவ்வொருவரும் மக்கள் தொகை எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்தியாக வேண்டும். தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பாக மத்திய அரசு தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனை எப்படி கணக்கிடப் போகிறார்கள் என்பது அறிவிப்பும் மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், இதில் தாமதம் செய்யப்படுகிறது. சரியான நேரத்தில் இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்யும் என்று நம்புகிறேன்.

உலகளாவிய வாய்ப்புகளுக்கு ஏற்ப அனைவரும் பல மொழிகளை கற்றுக் கொள்வது அவசியம். அதனால்தான் ஆந்திரப் பல்கலைக்கழகங்களில் பல மொழி கற்பிக்கும் மையங்களை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறோம்" என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. தற்போது ஆந்திர முதல்வரும் பாஜக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தவர்கள் தமிழகத்தின் பகைவர்கள்... பாஜக, நாதக கட்சிகளை போட்டுத் தாக்கிய திமுக!
இதையும் படிங்க: நாளைக்கு இதுமட்டும் நடந்தால்... பாஜக என்ன செய்யும் தெரியுமா?...பகீர் கிளப்பும் கனிமொழி...!