அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிடுவேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கு “முடிந்தால் அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்கள்” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருந்தார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “அண்ணாசாலையில் எங்கு வர வேண்டும், எப்போது வர வேண்டும்” என அறிவிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த நிர்வாகியுமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், “அண்ணாமலைக்கு வந்து உதயநிதிக்கு சவால் விட்டிருக்கிறார். தைரியம் இருந்தால் அண்ணாமலை அண்ணாசாலை பக்கம் வரட்டும். அதுக்கப்புறம் பார்த்துக்கலாம் எனக்கூறியிருக்கார். அண்ணாமலை எதுக்கு வரணும் நானே வரேன் எங்க வரணும்னு சொல்லுங்க என்னைக்கு வரணும்னு சொல்லுங்க நேரம் குறிங்க. தமிழக முதல்வரே இது தமிழ்நாடு எட்டு கோடி மக்களுக்கும் சொந்தமானது. யாருமே அறிவாலயத்துக்கு முன்னாடி வரக்கூடாதுன்னு சொன்னா, “அது என்ன ரெட் லைட் ஏரியாவா?” என கடுமையாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பேசிய அவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது கேவலமானது என்றும், அவர் தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: திமுக ஒப்புக்கொள்ளட்டும்... சங்கியா..? இல்லை மங்கியா? எனப் பார்த்து விடுவோம்... வானதி தடாலடி..!

மதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் ஒரு ஊரே அண்ணா அறிவாலயத்தை தாக்க முயன்ற போது, அதற்கு தக்க பாதுகாப்பு கொடுத்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலிதா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தற்போது உதயநிதி எங்கள் பகுதிக்குள் வராதீர்கள் என்கிறார். அப்படின்னா இவர்கள் அண்ணா அறிவாலயத்தை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று தான் பொருள் கொள்ள முடியும். உடனே ஒரு கேள்வி கேட்பார்கள், ரெட் லைட் ஏரியா என சொன்ன பொன்.ராதாகிருஷ்ணன் அதுக்காக தான் இப்போது வருகிறார் என்பார்கள். இந்த குசும்பு வேலைகள் எல்லாம் எங்களிடம் வேண்டாம். நீங்க விட்ட சவாலுக்காக நாங்க அங்கு வருகிறோம். உங்களால் எங்களை என்ன செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார்.

அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா? என பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது தொடர்பாக இந்து அறிநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், திமுகவில் சேருவதற்காக அண்ணா அறிவாலயத்திற்கு வரலாம், நட்பு பாராட்டுவதற்கு வரலாம், அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் செங்கல்லை எல்லாம் பிடுங்கி எடுத்து விடுவேன் என்றால்? அவரை எப்படி அனுமதிக்க முடியும். பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு வயது முதிர்ந்த அரசியல்வாதி, மத்திய அமைச்சராக இருந்தவர் அவர் மீது நாங்களும் மரியாதை வைத்திருக்கிறோம் எங்கள் முதல்வரும் மரியாதை வைத்திருக்கிறார்.

வயதை தாண்டியவர் அப்பா, தாத்தா ஸ்தானத்தை அடைந்தவர் ரெட் லைட் ஏரியா என்றால் அவருடைய எண்ணங்கள் எதை பிரதிபலிக்கிறது என்றுதான் இதை காட்டுகிறது. பாஜக ட்விட்டரில் கெட் அவுட் ஸ்டாலின் ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள், அதற்கு மக்கள் எந்த அளவு வரவேற்பு தருவார்கள் என்று பார்க்கலாம். ஏற்கனவே அனுபவித்த கோ பேக் மேடி விவகாரத்தை மீண்டும் அவர்களே கையில் எடுக்கின்றார்கள். அந்த கெட் அவுட் என்று சொல்லப்படுகின்ற வார்த்தைக்கு உகந்த ஒருவர் பாரத பிரதமராகத் தான் இருக்க முடியும் என்றார்.
இதையும் படிங்க: திமுகவை தொட்டுப்பார்... மண்ணோடு மண்ணாகிப்போவாய்… அண்ணாமலைக்கு சேகர்பாபு பதிலடி..!