ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாவை அடக்கி பேச வேண்டும் எனவும் தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றிவிட்டு தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா என காட்டமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும், தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள் என்றும் இதனை பிரதமர் மோடி உயர்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல திரும்புற கதையெல்லாம் வேண்டாம் அன்ணாமலை.. பங்கம் செய்த காங்கிரஸ் எம்.பி.!
இந்த நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

அதில், பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள் என கூறியுள்ளார். திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள், உண்மையை தானே சொல்லியிருக்கிறார் என கூறினார்.
மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது,இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திராவிடத்தின் பொய் பித்தலாட்டத்தைதான் அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்கணுமா.? சசிகாந்தை போட்டு பொளந்த அண்ணாமலை.!