''நீ சரியான ஆளாக இருந்தால் கெட் அவுட் மோடி என்று சொல்லிப்பார்… நீ சொல்லிப்பார்… இல்லை நீ சொல்லித்தான் பாரேன்''என அழுத்தம் திருத்தமாக நேற்று முன் தினம் கரூர் பொதுக் கூட்டத்தில் சவால் விட்டிருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. ''உன் வீட்டிற்கு முன்னால் வந்து பால்டாயில் பாபு'' என போஸ்டர் ஒட்டுவேன்'' எனவும் எச்சரித்து இருந்தார். இந்நிலையில், திமுக ஐடி விங்க் அண்ணாமலையின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் #GetOutModi 'கெட் அவுட் மோடி' என்கிற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி நேற்று சமூகவலைதளங்களில் ட்ரெண்டாக்கினர்.

எக்ஸ்தளத்தில் இந்த ஹேஷ்டேக் உலக அளவில் நேற்று இரண்டாவது இடத்திலும், இந்திய அளவில் முதல் இடத்திலும் ட்ரெண்டாகியது.மறுபுறம் பால்டாயில் பாபு என்கிற ஹேஷ்டேக்கை பாஜக ஆதவராளர்கள் பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தனர். இதனால் வெறுத்துப்போன அண்ணாமலைவ் இதுகுறித்து கெடு விதித்து திமுகவினருக்கு சவால் விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: பார்ட் டைம் திமுக அமைச்சரே… அந்த 1.5 லட்சம் கோடி எங்கே..? சுடச்சுட பதிலடி கொடுத்த அண்ணாமலை..!
இதுகுறித்து அவர், '' சமூக ஊடக வலைத்தளங்களில் பார்க்கிறேன். ஒரு பக்கம் 'கெட் அவுட் மோடி' என்று வருகிறது. இன்னொரு பக்கம் 'ஃபால்டாயில் பாபு' என்று ஒரு தரப்பு பகிர்கிறது. இரண்டு தரப்பினருக்கும், இடையே சமூக வலைதளங்களில் கருத்து பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஐடிவிங் அனைவரும் சேர்ந்து முக்கி முக்கி இன்று இரவு வரை எவ்வளவு ட்வீட் போடுவீங்களோ, போடுங்கள். நாளைக்கு காலையில் 6:00 மணிக்கு என்னுடைய சமூக வலைதளத்தில் 'கெட் அவுட் ஸ்டாலின்' என்று நான் பதிவு செய்கிறேன். எவ்வளவு போகிறது என்று பார்ப்போம்.

நான் சவால் விடுகிறேன். உனக்கு 24 மணி நேரம் டைம் கொடுக்கிறேன். நேத்து நைட் ஆரம்பித்தாய். நாளைக்கு காலை 6 மணி வரை நான் உனக்கு நேரம் கொடுக்கிறேன். அரசு இயந்திரம், திமுக ஐடி விங்க் உள்ளிட்ட எல்லோரையும் பயன்படுத்தி 'கெட் அவுட் மோடி' என்று எவ்வளவு ட்வீட் போட முடியுமோ, போட்டுக்கொள். நாளைக்கு காலை 6 மணிக்கு நான் ஆரம்பிக்கிறேன். 'கெட் அவுட் ஸ்டாலின்' என்று பதிவிடுகிறேன்.
தமிழ்நாட்டில் இருந்து 'ஸ்டாலினே வெளியே போ'. ஆட்சி சரியில்லை, சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. எங்கள் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தரமான எந்த வசதியும் இல்லை. அதனால் ஸ்டாலின் அவர்களே நீங்களும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று என்னுடைய முகநூலில் கெட் அவுட் ஸ்டாலின் என்று ஆரம்பிக்கிறேன்.

நீங்கள் போட்ட ட்வீட்டை மொத்தமாக குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு 6 மணியிலிருந்து பாஜகவுடைய டைம். நாங்கள் எவ்வளவு ட்வீட் செய்கிறோம் என்று குறிப்பெடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு நாளை மறுநாள் இந்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். இன்று ஒரு நாள் உனக்கு... நாளை ஒரு நாள் பாஜகவுக்கு'' என சவால் விடுத்திருந்தார் அண்ணாமலை.
இந்நிலையில் அவர் சொன்னது போலவே, #GetOutStalin என்கிற ஹேஷ்டேக் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. இந்த செய்தியை பதிவு செய்யும் வரை 5 லட்சத்து 2 ஆயிரம் பேர் இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்திய அளவில் #GetOutStalin ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. #பால்டாயில்_பாபு என்கிற ஹேஸ்டேக்கும் படுபயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரம்பேர் இந்த ஹேஷ்டேக்கை பகிர்ந்துள்ளனர்.

#GetOutModi என திமுகவினர் பகிர்ந்த ஹேஷ்டேக்கை நேற்று முதல் இன்று வரை 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் இப்போது வரை பகிர்ந்துள்ளனர். ஆனால், இன்று காலை ஆரம்பித்த #GetOutStalin அதையும் தாண்டி வெறும் 4 மணி நேரத்திலேயே அதனை முறியடித்துள்ளது. 24 மணி நேரத்தில் திமுக செய்த காரியத்தை வெறும் 4 மணி நேரத்திலேயா முறியடித்து திமுக முகத்தில் கரியை பூசி உள்ளார் அண்ணாமலை.
இதையும் படிங்க: 'அறிவாலயத்திற்கு அந்த லூசு வந்துடும்… பணம் கேட்டு துரத்தி அடி..' உதயநிதிக்கு அலெர்ட் கொடுத்த அன்பில் மகேஷ்..!