தமிழ் புத்தாண்டு இன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பகிர ஆலயங்களில் மக்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த புத்தாண்டு, அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், அளிக்கும் ஆண்டாகவும், அனைவரின் வாழ்விலும், அன்பும், அமைதியும் பெருகும் ஆண்டாகவும், புதிய தொடக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் ஆண்டாகவும் அமையட்டும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: செழிப்பான சமூகத்திற்கு ஆரோக்கியமே அடித்தளம்.. சுகாதார தினத்தில் பிரதமர் வெளியிட்ட வீடியோ..!

மீண்டும் ஒருமுறை...இனிய விசுவாவசு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அது இலவசம் இல்லைங்க.. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சொன்ன சூப்பரான விஷயம்..!