ஜூன் 5, 2024 அன்று சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரை விண்வெளிக்கு கொண்டு சென்ற கேரியர் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டது. பின்னர் நாசா தனது திட்டங்களை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது முதலில் எட்டு நாள் பயணமாக திட்டமிடப்பட்டது, ஆனால் விண்வெளி வீரர்கள் இருவருக்கும் சுமார் 286 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.

9 மாதங்கள் கழித்து சுனிதா வில்லியம்ஸ் சக நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர், நிக் ஹேக், ரோஸ்காஸ்மோஸ் மற்றும் அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ 9 டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பினார்.
இதையும் படிங்க: வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.. விண்வெளி வீரர்களை மீட்ட மகிழ்ச்சியில் அமெரிக்க வெள்ளை மாளிகை..!

அமெரிக்காவின் ஃபுளோரிடா கடலில் பத்திரமாக இறங்கி மிதந்த டிராகன் விண்கலம் கப்பலில் ஏற்றப்பட்டது. டிராகன் விண்கலத்தில் உள்ளே இருந்த 4 விண்வெளி வீரர்களும் கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமி திரும்பிய நிகழ்வுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மீண்டும் வருக க்ரூ 9 ! பூமி உங்களை மிஸ் செய்தது. அவர்களின் இந்த சோதனை மன உறுதி, தைரியம் மற்றும் எல்லையற்ற மனித மனப்பான்மைக்கு ஒரு சோதனையாக அமைந்தது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் #Crew9 விண்வெளி வீரர்கள் மீண்டும் ஒருமுறை விடாமுயற்சி உண்மையில் என்ன என்பதை நமக்குக் காட்டியுள்ளனர். அறியப்படாத பரந்த உலகில் அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு என்றென்றும் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளார்

விண்வெளி ஆய்வு என்பது மனித ஆற்றலின் வரம்புகளைத் தாண்டிச் செல்வது, கனவு காணத் துணிவது மற்றும் அந்தக் கனவுகளை நனவாக்கும் தைரியத்தைக் கொண்டிருப்பது பற்றியது. ஒரு முன்னோடி மற்றும் சின்னமான சுனிதா வில்லியம்ஸ், தனது வாழ்க்கை முழுவதும் இந்த உணர்வை வெளிப்படுத்தியுள்ளதாக புகழ்ந்துள்ளார்.
அவர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிசெய்ய அயராது உழைத்த அனைவரையும் நினைத்து நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறோம் என்றும் துல்லியம் ஆர்வத்தையும், தொழில்நுட்பம் விடாமுயற்சியையும் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சவால்களை எதிர்கொண்ட சுனிதா, வில்மோருக்கு ராயல் சல்யூட்..! புகழ்ந்து தள்ளிய இபிஎஸ்..!