அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை சார்பில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் மனிதநேயம் காப்போம் குறித்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.

பேரணியில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாய் வாழ்வோம் ஜாதி மத பேதமின்றி அனைவரையும் அரவணைப்போம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்போம் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம் தீண்டாமையை ஒழிப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
இதையும் படிங்க: ஏப்ரலில் முற்றுகை போராட்டம்.. மின் ஊழியர் அமைப்பினர் அறிவிப்பு..

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி ஜெயங்கொண்டம் சாலை உழவர் சந்தை வார சந்தை வழியாக அரியலூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது பேரணியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் ஆசிரியர்கள் காவல்துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: துப்பாக்கியால் நாயை கொன்ற நபர்.. அதிரடி காட்டிய ப்ளூ கிராஸ் அமைப்பினர்!