இந்தியாவில் அசித்ரோமைசின், ஐப்ரூபன் உள்பட 900 வகையான மருந்துகள் விலையை 1.74 சதவீதம் உயர்த்தி, தேசிய மருந்து விலை ஆணையம் (என்பிபிஏ) அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு ஏப்ரல் 1ம் தேதி (இன்று) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தீவிரத் தொற்று, இதயநோய்கள், நீரிழிவு நோய்களுக்கான மருந்துகளும் விலை உயர்ந்தன.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் இணைஅமைச்சர் அனுப்பிரியா படேல் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் “மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் மொத்தவிலைக் குறியீட்டின் அடிப்படையில் விலை மறுஆய்வு செய்யப்படும்.
இதையும் படிங்க: அப்பாடியோவ் நிம்மதியா இருக்கு..! சமையல் சிலிண்டர் விலை ரூ.41 குறைப்பு..!
கடந்த 2024-25 நிதியாண்டுக்கான மருந்துகள் விலை 0.005 சதவீதம் உயர்த்தப்பட்டு 1.4.2024 முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி 2024-25ம் ஆண்டுக்கான விலை மறுஆய்வின்படி 900 வகையான மருந்துகள் விலை 1.74 சதவீதம் உயர்த்தப்படும்” எனத் தெரிவித்தார்.

இதன்படி அசித்ரோமைசின் மாத்திரை 250எம்ஜி ரூ.11.87 ஆகவும், 500எம்ஜி ரூ.23.98ஆகவும் விலை உயரும். அமோக்ஸிலின் மருந்து, கிளாவுலானிக் ஆசிட் மருந்து விலை ஒரு மில்லி ரூ.2.09 ஆக உயரும். டைக்லோபெனாக் (வலிநிவாரணி) மாத்திரை ஒன்று ரூ.2.09, ஐப்ரூபன் 200எம்ஜி மாத்திரை 0.72, 400எம்ஜி ரூ.1.22 அதிகரித்துள்ளது.
நீரிழிவுக்கான மாத்திரை விலை ரூ.12.74 வரை உயர்ந்துள்ளது. ஆன்ட்டி வைரல் மாத்திரையான அசிக்ளோவர், ஹைட்ரோகுளோரிக்கின் விலையும் உயர்ந்துள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் மருந்துகளின் விலையை அரசு அறிவித்துள்ளபடி உயர்த்திக்கொள்ளலாம் இதற்கு முன் அனுமதிதேவையில்லை.
இதையும் படிங்க: தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு..! 40 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் அமல்..!