நேற்று சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கச் சென்ற முன்னாள் ஆளுநர் மற்றும் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டது. வீடு, வீடாக போய் கையெழுத்து வாங்கச் சொன்னால், பள்ளிக்கூட வாசலில் நின்று மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகிறார்கள் எனக் குற்றச்சாட்டு என தமிழக பாஜக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல் ஆதாயத்திற்காக திமுக மும்மொழி கொள்கையை எதிர்க்கிறார்கள் ,மும்மொழி கொள்கையை எதிற்பதன் மூலம் திமுக மிகப்பெரிய யுத்தத்தை தமிழக குழந்தைகள் மீது தொடங்கியுள்ளது என குற்றச்சாட்டினார்.
இதையும் படிங்க: அறிவாலயம் என்ன 'ரெட் லைட்' ஏரியாவா? - பொன்னார் உதிர்த்த ஒற்றை வார்த்தை: பொங்கி எழுந்த சேகர் பாபு..!

முதல்வரை மாணவர்கள் அப்பா என அழைப்பதாக அவர் கூறுகிறார். இது மிகவும் சந்தோசமான விஷயம், தந்தை ஸ்தானத்தில் இருந்து சிந்திக்கலாம். தாய்மொழியில் கட்டாயம் கல்வி பயில வேண்டும் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் இருக்கட்டும் , மூன்றாவது மொழியாக இந்தி படிகட்டும் என கூறுவதில் என்ன தவறு
. அரசு பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு வருகிறது, தனியார் பள்ளிகள் அதிகரித்து வருகிறது.

வீட்டில் தமிழ் பேச வேண்டும், பள்ளியில் தமிழ் பேசவேண்டும் என்பதை முதலில் சொல்லி கொடுங்கள். இந்திய ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என எனக்கும் ஒரு தமிழனாக ஆசை உள்ளது.ஒரு காலத்தில் அதுவும் நடக்கும்.
அரசு பள்ளி மாணவர்களிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகிறார்கள் எனக்கூறும் அமைச்சர் அன்பில, ராஜினாமா செய்ய வேண்டும் எங்கேயும் அப்படி நடக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா? யாரை பார்த்து? திடீரென ஆவேசமான பொன் ராதா..!