அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கொடுத்த குடைச்சல் குறித்து அக்கட்சியில் புகைய ஆரம்பித்து இருக்கிறது.
அதிமுக மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவுக்கு செல்லாமல், எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக இருந்த நாமக்கல் மாவட்டத்தைஇச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி செல்லாமல் புறக்கணித்து விட்டார். ஆனாலும், குடும்ப நிகழ்ச்சி இருந்ததாகச் சில்லி தங்கமணி சமாளித்து இருக்கிறார்.ஆனால் அவர் போகாமல் இருந்ததற்கு வேறொரு புதிய தகவலையும் சொல்கிறார்கள் அதிமுகவினர்.

இதுகுறித்து நாமக்கல் அதிமுகவினர் கூறுகையில், ''அதிமுக ஆட்சியின்போது, அமைச்சரவையில் தங்கமணி பெரிய இலாகாவை கவனித்து வந்தார். மின்சாரம், நிலக்கரி ஆகியவை என்பதால் மத்திய அமைச்சர்களுடன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வந்தார். எந்த விவகாரமாக இருந்தாலும் தங்கமணி மூலமாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் வந்து கொண்டு இருந்தது. தங்கமணிது ஏற்பாட்டின்படிதான் டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அருகில் வைத்து அழகு பார்த்தார் பிரதமர் மோடி.
இதையும் படிங்க: கலைஞர் நூற்றாண்டு நாணயத்தில் மட்டும் இந்தி இனிக்குதா? போட்டுத் தாக்கும் பிஜேபியினர்..!

ஆனால், அதிமுகவை முற்றிலும் காலில்போட்டு மிதிக்க திட்டமிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் செயல்பாடுகளை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் இருந்து வெளியே ஓடிவந்தார்.
அதன்பிறகு பிரதமர் மோடி. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பலமுறை தொடர்பு கொண்டும் போனில் பேச மறுத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. இதனால் ரொம்பவே அப்செட் ஆகிப்போனார் தங்கமணி.''எடப்பாடி பழனிசாமியை எங்கேயோ கொண்டு போக கனவு கண்டோமே.. ஆனால் அதற்கு இவர் சரிபட்டு வரவில்லையே'' என்ற பெரும் ஏக்கம் அவரது மனதில் வந்துபோகிறது.

அதே நேரத்தில் திடீரென செங்கோட்டையன் கொடி தூக்கியதிலும் ஒரு விவகாரம் இருக்கிறது. சசிகலா, ஓ.பி.எஸ். டிடிவி.தினகரன் ஆகியோரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியபோது தங்கமணியும் உடன் இருந்துள்ளார். இந்த மனவருத்தத்தால்தான் தங்கமணி, ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை'' எனச் சொல்கிறார்கள் நாமக்கல் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.
இதையும் படிங்க: அமித் ஷா போட்ட பதிவுல இதை கவனிச்சீங்களா?.... துள்ளாட்டம் போடும் அண்ணாமலை ஆதரவாளர்கள்...!