×
 

கோட்டையில் இடித்த இடி... மாஃபாவிடம் சரண்டர் ஆன ராஜேந்திர பாலாஜி... அடிச்சார் பாருங்க அந்தர் பல்டி...!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தான் மாஃபா பாண்டியராஜனை விமர்சிக்கவே இல்லை எனக்கூறியுள்ளார்.

விருதுநகர் தன்னுடைய கோட்டை என மார்தட்டி வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, இன்று நாடார் சங்கத்தினர் ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி எச்சரிக்கை விடுத்தினர். அதில் கே.டி.ராஜேந்திர பாலாஜியைக் கண்டித்தும் மாஃபா பாண்டியராஜனுக்கு ஆதரவு தெரிவித்தும் விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அந்த போஸ்டரில்  “எங்கள் சமூக, படித்த பண்பாளர் அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் மஃபா.K.பாண்டியராஜன் 
அவர்களை அவ மரியாதையாக பேசி, மிரட்டிய ராஜேந்திரபாலாஜியே! நாடார்கள் வாக்கு உனக்கும் உன்கட்சிக்கும் வேண்டாமா?. நாவை அடக்கி பேசு!!. காமராஜ் நாடார் சமூக அறக்கட்டளை விருதுநகர் மாவட்டம்" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. 

இதனிடையே கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தான் மாஃபா பாண்டியராஜனை விமர்சிக்கவே இல்லை எனக்கூறியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜி, மொழி பிரச்சனையை மையபடுத்தி தமிழகத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் தமிழகத்தில் தேவையில்லாத பிரச்சனை தான் உருவாகும். தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான்
உயிர் நாடி. 

இதையும் படிங்க: நாடார்கள் ஓட்டு வேணுமா? நாவை அடக்கிப் பேசு... ராஜேந்திர பாலாஜிக்கு பகிரங்க எச்சரிக்கை...!

இவ்விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டார். தேவைப்பட்டால் வேறு மொழிகளை படிக்கலாம். தமிழகத்தில் எந்த கட்சி வளர்ந்திருந்தாலும் திமுக - அதிமுகவிற்கு தான் கிராமபுறங்களில் தனிப்பெருபான்மை இருக்கு.  அதிமுகவை எதிர்க்கின்ற தகுதி திமுகவுக்கு தான் இருக்கு. அதேபோல் திமுகவை எதிர்க்கின்ற தகுதி அதிமுகவுக்கு தான் உண்டு என்றார். 

அப்போது மாஃபஃ பாண்டியராஜனுக்கு மேடையிலேயே மிரட்டல் விடுத்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “மாஃபா பாண்டியராஜனை நான் பேசியது குறித்த விவாகரத்தில் எந்த  பிரச்சனையுமில்லை. அந்த விவாகரம் முற்றுபுள்ளி ஆகிவிட்டது. நான் அவரை பற்றி பேசவே இல்லை எனக்கூறினார். 

என் மீது  பதியபட்ட வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது.இன்னும் தீர்ப்பு வரவில்லை.தமிழகத்திற்க்கு எல்லாம் மாநில போல சமமான நிதியை வழங்கவேண்டும் போதிய நிதி  வழங்க வேண்டும். தேவையான ஜி.எஸ்.டி வாங்குகிறார்கள் என்றால் போதிய நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.டாஸ்மார்க் அலுவலகத்தில் ரெய்டு திடீரென்று நடக்குது.அப்புறம் நிக்குது.இன்னும் முடிவு வரவில்லை என்றார். 

தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்கிறதா என்ற கேள்விக்கு , “அதிமுகவுக்கு பெரிய ஆதரவு இன்று தமிழகத்தில் உள்ளது.மற்ற எந்த கட்சி தமிழகத்தில் வளர்ந்திருக்கிறதா என்பதை தேர்தலுக்கு பிறகு தான் கூற முடியும்” என்றார். 

இதையும் படிங்க: அதிரும் அதிமுக... அடுத்தடுத்து நடந்த சண்டையால் இபிஎஸ் அப்செட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share