×
 

மீண்டும் செங்கோட்டையன் டெல்லி பயணம்...  முக்கிய புள்ளியுடன் ரகசிய சந்திப்பு.. அலறும் இ.பி.எஸ் டீம்..!

செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம் செய்ய திட்டமிட்டுருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம் செய்ய திட்டமிட்டுருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே முட்டல் மோதல் நீடித்தவருகிறது. இதனிடையே, சமீபத்தில் டெல்லி சென்று பாஜக தலைவர்களான அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கே.ஏ.செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று திரும்பியது ஒரு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.

 இந்நிலையில் இன்று மீண்டும் செங்கோட்டையன் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி அதிமுக பாஜக இடையே கூட்டணி அமைப்பதற்கான  பேச்சு வார்த்தை என்பது கடந்த வாரம் தொடங்கியிருந்தது. இதற்காக டெல்லி சென்றிருந்த எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவை சந்தித்து ஊர் திரும்பியிருந்தார். ஆனால் அவர் கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்பாக பேசவில்லை எனக்கூறியிருந்த நிலையில்,  அமித் ஷா பேச்சுவார்த்தையை தொடங்கி நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தினார். 

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு..? அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் என்ன நடக்கிறது.?

இந்த சூழ்நிலையில் இரு தினங்களுக்கு முன்பாக செங்கோட்டையன் ரகசியமாக மதுரையிலிருந்து டெல்லி சென்று அங்கு நிர்மலா சீதாராமனை சந்தித்துவிட்டு ஊர் திரும்பியதாக தகவல்கள் வெளியாகின. எடப்பாடி பழனிச்சாமியுடன் அமித் ஷா தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில், அதில் சில முக்கியமான சில உடன்பாடுகள் எட்டப்படாத ஒரு காரணத்தினால் செங்கோட்டையினை வைத்து அடுத்த கட்டமாக காய் நகர்த்துவதற்கான வேலைகளில் டெல்லி பாஜக மேலிடம் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாகவே எடப்பாடி பழனிச்சாமியுடன் கடுமையான ஒரு அதிருப்தியில் செங்கோட்டையன் இருந்து வருகிறார் என்றும்,  அவருடன் பேசுவதை தவிர்ப்பது அவருடைய நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது உள்ளிட்ட விஷயங்களை அவர் ஈடுபட்டு வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், செங்கோட்டையனை வைத்து அதிமுகவை தன்வசப்படுத்துவதற்கான வேலையில் இறங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காகத்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கே செங்கோட்டையன் டெல்லி சென்று அங்கு அமித் ஷாவை சந்தித்ததாக ஒரு தரப்பு சொல்லியிருந்தாலும் கூட, நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாகவும் ஒரு தரப்பினர் அந்த தகவல்களை வெளியிட்டிருந்தார். 

இன்று மாலை இரவு மீண்டும் அவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. டெல்லி செல்லக்கூடிய செங்கோட்டையன் நாளை அமித் ஷாவை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் எந்த ஒரு உடன்பாடும் ஏட்டப்படவில்லை சில நிபந்தனைகளை பாஜக விதித்ததாகவும், அதை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சூழ்நிலையில் அதிமுகவை கைப்பற்ற அல்லது அதிமுகவை தன்வசப்படுத்துவதற்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவுக்கு கொண்டு வருவதற்காக செங்கோட்டையனை வைத்து அமித்ஷா மற்றும் பாஜக வந்து தற்பொழுது நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்காக செங்கோட்டையன் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 

திரும்பி இருக்கக்கூடிய நிலையில் மீண்டும் சென்று அது அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்காக செங்கோட்டையன் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பாஜக இடையேயான அந்த கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெற்று வருவதாக கூறப்படக்கூடிய சூழ்நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக களமிறங்கி இருக்கக்கூடிய கேஎஸ் செங்கோட்டையனை மையப்படுத்தி, தற்பொழுது அதிமுகவை தன்வாசப்படுத்துவதற்கான வேலையில் பாஜக இறங்கியுள்ளது அதிமுகவிலும்  பெரும் புகழ்ச்சலையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. 
 

இதையும் படிங்க: இறுமாப்பில் இ.பி.எஸ்..! அதிமுகவில் பாஜகவின் அடுத்த ஆப்ஷன்... செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share