“அதிமுக வேண்டாம்; அண்ணாமலை தான் வேணும்” - பாஜக தொண்டர்கள் பார்த்த உள்ளடி வேலை...!
அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என பரக்குடி பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என பரக்குடி பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வர உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா முயன்று வருகிறார். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது எனவும், அதுவும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தினால் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்றும் அண்ணாமலை அமித் ஷாவிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தால் கூட்டணிக்கு செட் ஆகாது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, அதிமுகவினர் அண்ணாமலைக்கு பதிலடி தரும் வகையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, அதிமுக தலைமையில் தான் கூட்டணி, எடப்பாடி யாரை முதல்வராக ஏற்பவர் கள் தான் கூட்டணியில் சேர முடியும் என போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக... சிவகங்கையை அதகளப்படுத்திய எடப்பாடியின் ர.ர.க்கள்...!
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், அண்ணாமலைக்கு ஆதரவாகவும் பரமக்குடி பாஜகவினர் களமிறங்கியுள்ளனர். அதிமுக கூட்டணி வேண்டாம் எனவும், அண்ணாமலை மாநில தலைவராக வேண்டும் எனவும் பாஜக சார்பில் பரமக்குடியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கப்படுவார் என்ற பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும் எனவும், அதிமுக கூட்டணி வேண்டாம் எனவும் பரமக்குடி நகர் முழுவதும் சுவரொட்டிகள் வெட்டப்பட்டுள்ளது. பாஜக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மக்கள் மனதில் எடப்பாடி பழனிச்சாமிக்குதான் முதலிடம்.. உரக்கச் சொல்லும் ஆர்.பி. உதயகுமார்.!!