×
 

ஈசிஆரில் பெண்களை மிரட்டிய திமுக குண்டர்களுக்கு போலீசார் ஆதரவா..? வெகுண்டெழுந்த அன்புமணி ராமதாஸ்..!

சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை மகிழுந்தைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது?  

திமுக கொடி கட்டி காரில் வந்த குண்டர்களால் உயிர்பயத்தில் பதறிய பெண்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னை ஈ.சி.ஆரில்ள்லிரவில்ிமுக கொடி கட்டிய சொகுசுாரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், காரில் சென்ற பெண்களை விரட்டிச் சென்று அச்சுறுத்தியதோடு, அந்தப்பெண்களை அவர்களது வீடுவரை விரட்டிச் சென்று அச்சுறுத்தியதோடு, பெண்கள் சென்ற காரை தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு எதிர்கட்சிகள் தொடர்ங்கி, பொதுமக்கள் வரை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்த இளைஞர்கள் சென்ற காரை உராசிவிட்டு மன்னிப்புக் கேட்காமல் சென்றதால் அந்த இளைஞர்கள் விரட்டிச் சென்றதாகாவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிழக்குக் கடற்கரை சாலையில்  பெண்களை துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: இனி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி கணிப்பு!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த மகிழுந்தை, திமுக கொடி கட்டப்பட்ட மகிழுந்தில் வந்த சிலர் வழிமறித்து மகிழுந்தில் இருந்த  பெண்களிடம் அத்துமீறும் காட்சிகள் அடங்கிய  காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை புறநகரின் மிக முக்கியமான சாலையில் பயணிக்கும் பெண்களை வழிமறித்து தொல்லை கொடுக்கும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு  துணிச்சல் ஏற்பட்டிருப்பது அச்சமும் கவலையும் அளிக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றம் செய்த சமூக விரோதிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.


சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை மகிழுந்தைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது?  மகிழுந்தில் திமுக கொடி கட்டப்பட்டிருந்ததாலா?  அல்லது  தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக எத்தகைய குற்றங்கள் நடந்தாலும் அதை அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பதாலா?  என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது. கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை வழிமறித்து அத்துமீறிய, திமுக கொடி கட்டப்பட்ட மகிழுந்தில் வந்தவர்கள் மீது  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: 40 ஆயிரம் கோடி வருவாய் இருந்தும் ரூ.4435 கோடி நஷ்டம் எப்படி ..மின்வாரியம் மீது சந்தேகம் கிளப்பும் அன்புமணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share