×
 

அடித்து சவால் விட்ட துரைமுருகன்..! திமுகவுடன் கைகோர்த்த பாஜக..!

கருணாநிதிக்கு இது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. நான் சவால் விடுகிறேன்'' என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

கச்சத்தீவு விவகாரங்கள் தொடர்பாக வானதி சீனிவாசன், தமிழக அமைச்சர்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுபட்டது.

அப்போது முதலமைச்சராக இருந்த கட்சித்தீவை தாரவை வார்க்கும் விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். இதனால், வானதி சீனிவாசனுக்கும், திமுக அமைச்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

''கருணாநிதிக்கு இது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. நான் சவால் விடுகிறேன்'' என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வானதி சீனிவாசன் மற்றும் திமுக அமைச்சர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கச்சத்தீவு மீட்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் ஒன்றை சட்டசபையில் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தில் கச்ச தீவை உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்கள். தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இலங்கை கடற்படை நாள்தோறும் பிடிக்கப்படுவதும், அவர்களது  படகுகள் உள்ளிட்ட பொருள்கள் சேதப்படுத்தப்படுவதும், கைப்பற்றப்படுவதும் என தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இதையும் படிங்க: “அதிமுக வேண்டாம்; அண்ணாமலை தான் வேணும்” - பாஜக தொண்டர்கள் பார்த்த உள்ளடி வேலை...!

எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக கச்சத் தீவு உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் அங்கமாக இருக்கக்கூடிய பாஜக கட்சத் தீவை, உடனடியாக மீட்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதற்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்து கட்சிகளும் பேசினார்கள். திமுக கூட்டணி கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அதன் அடிப்படையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, ''இந்த தீர்மானம் குறித்து பாஜக சார்பில் ஆதரவு தெரிவிக்கப்படும்'' என்று  கூறினார். கச்சத்தீவின் வரலாறு குறித்த பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பேசிய வானதி சீனிவாசன் இந்தத் தீர்மானத்திற்கு பாஜக சார்பாக ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்.

குறிப்பாக ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அவர்கள் ''தமிழ்நாட்டின் இது முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அரசியல் சார்ந்து மட்டும் அல்லாமல் அரசியலுக்கு அப்பாற்பட்டு இது ஒரு முக்கியமான பிரச்சினை. தொடர்ச்சியாக இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் வலைகள், படகுகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

 இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 10 மீனவர்களாவது கைது செய்யப்படும் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவர்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து பாஜக சார்பில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக முன் மொழிந்து இருக்கிறார். 

இதையும் படிங்க: வக்ஃப் மசோதாவை யார் ஆதரிப்பது? யார் எதிர்ப்பது..? பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share