“நான் பிரபாகரனைச் சந்திக்கவே இல்லை” ... சீமான் அடித்த திடீர் பல்டி - காரணம் என்ன?
நான் பிரபாகரனை பார்க்கவே இல்லை, புகைப்படத்தில் இருப்பது நானே இல்லை, நம்புகிறீர்களா என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நான் பிரபாகரனை பார்க்கவே இல்லை, புகைப்படத்தில் இருப்பது நானே இல்லை, நம்புகிறீர்களா என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது
“திமுகவில் இணைவதற்கு முன்பே 3 ஆயிரம் பேர் என்பது எப்படி தெரியும்? என கேள்வி எழுப்பினார். நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் எனத் தெரிவித்த அவர், திமுகவையும் சேர்த்து நாம் தமிழர் தான் வளர்க்க வேண்டி இருக்கிறது என தெரிவித்தார்.
பெரியாரை பற்றி தவறாக பேசுபவர்கள் இழிபிறவிகள் என திமுக பொது செயலாளர் துரைமுருகன் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, திராவிடர் கழகத்தில் இருந்து திமுக பிறக்க காரணம் என்ன என்பதை ஏற்கனவே துரைமுருகன் சொல்லியிருக்கிறார் என தெரிவித்தார். கருணாநிதி பெரியாரை விமர்சித்து பேசியதில் நாங்கள் துளி கூட விமர்சித்து பேசவில்லை எனவும் துரைமுருகன் சொல்வது அண்ணாவையும், கருணாநிதியைதான் என பதில் அளித்தார்.
துரைமுருகன் பேசி இருப்பதை நான் வரவேற்கிறேன் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீமான் கதறக் கதற... தம்பிகள் பதறப் பதற... நாதகவில் இருந்து 3000 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திமுக..!
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ரத்த உறவு கிடையாது எனவும், லட்சிய உறவு மட்டுமே என தெரிவித்த அவர், லட்சிய உறவுக்கு போராடி செத்தவர்களும் , நாங்களும் தான் அவருக்கு ரத்த உறவுகள் என தெரிவித்தார். கார்த்திக் மனோகர் சொல்லுவதற்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை எனவும், உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் செல்வார்கள் எனவும் தெரிவித்தார்.
பிரபாகரனை சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்திருக்கலாம் என கார்த்திக் மனோகரன் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, நான் பிரபாகரனையே சந்திக்கவில்லை என்று சொல்கிறேன் எனவும், ஒருவர் எட்டு நிமிடம் சந்தித்ததாக சொல்கிறார், ஒருவர் பத்து நிமிடம் என்று சொல்கிறார், ஒருவர் இந்த படம் பொய் என்கிறார், சந்தித்தது உண்மையா? படம் பொய்யா? என தெரிவித்த அவர் நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை என்று சொல்கிறேன். எதை நம்புகின்றீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை ஏன் ஆய்வுக்கு உட்படுத்த முன்வரவில்லை என்ற கேள்விக்கு, அதை யாருக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.? எனக்கூறிய அவர், நான் தான் சந்திக்கவே இல்லை என்று சொல்கிறேனே எனவும், இப்படி பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு நான் ஏன் நிரூபிக்க வேண்டும்? நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். தேவை என்றால் தானே நிருபிக்க வேண்டும். அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் நானே இல்லை என்கின்றேன் என தெரிவித்த அவர், பிரபாகரனை சந்திக்கவே இல்லை என்று சொல்கிறேன் எனவும் திரும்ப திரும்ப ஏன் கேட்கின்றீர்கள்? என பதில் அளித்தார்.
இதையும் படிங்க: நா மட்டும் கோர்ட்டுக்கு போனா என்ன ஆகும் தெரியுமா? - சீமானை தெறிக்கவிட்ட ஆர்.எஸ்.பாரதி!