போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் பணியிட மாற்றம்.. ஆசிரியர் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!
போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் இடமாற்றம் செய்த வழக்கில், தலையிட மறுப்பு தெரிவித்து, ஆசிரியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன.
மாணவ - மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, போக்சோ சட்டத்தில் தண்டிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என 23 பேரை பணிநீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதே போல போக்சோ வழக்குகளில் சிக்கிய ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 12ம் வகுப்பு தேர்வெழுதிய 6 மாணவிகளிடம் பிட் சோதனையின் போது சில்மிஷம்: போக்சோவில் ஆசிரியர் கைது.!
ஈரோடு செம்புளிச்சாம் பாளையம் அரசு பள்ளியில் பணியாற்றிய சண்முகம் என்ற ஆசிரியரை கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.
தனக்கு எதிரான வழக்கில் தன்னை விடுதலை செய்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டு தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி, இடமாற்றம் உத்தரவில் தலையிட மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: போதை பழக்கி சீரழித்த கயவன்.. 5 ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் கொடுமை.. கேரள மாணவியின் கண்ணீர் கதை..!