குடும்பத்தலைவிகளுக்கு ஜாக்பாட்... முதலமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு...!
புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் நிலையில் 2500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து முதலமைச்சர் ரங்கசாமி அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது நான்கு மாதங்களாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அப்போது புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது, 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில இது வந்து 2026 ஆம் ஆண்டிற்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது கடைசி முழு பட்ஜெட் என்பதன் காரணமாக பல்வேறு அறிவிப்புகளானது கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பெண்களுக்கான மாத உதவித்தொகையை ஆயிரத்திலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கி இருப்பது வந்து புதுச்சேரி பெண்களுக்கு பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி பலமுறை சீரழித்த இளைஞன்.. உயிருக்கு போராடும் இளம்பெண்.. ஒருதலைபட்சமாக நடக்கும் போலீஸ்..?
அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு துறைக்கும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் புதுச்சேரியில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மழைக்கால நிவாரணமாக 2000 ரூபாய் உயர்த்தி வழங்கி இருக்கிறார். வனம் மற்றும் வனம் இல்லாத பகுதிகளில் மூன்று லட்சம் மரக்கன்றுகளும், பள்ளிகளில் இரண்டு இரண்டு லட்சம் மரக்கன்றுகளும் அவர் வந்து நடப்படும் என அறிவித்திருக்கிறார். அதேபோல குடிமைப் பொருள் வழங்கல் துறையின் மூலமாக இலவச அரிசியுடன் இரண்டு கிலோ கோதுமையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டு முதல் 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற மேம்பாட்டு நிதி இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் இளநிலை மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேசனில் நிர்வாண அட்ராசிட்டி.. பதறி ஓடிய பெண் காவலர்கள்.. தலைக்கேறிய போதையில் ஆடிய காவலர் கைது..