×
 

மான நஷ்ட ஈடு வழக்குப் போடுவேன்..! நடிகை விஜயலட்சுமியின் புது வீடியோ..!

தன்னைப் பற்றி அவதூறாக பேசும் நாம் தமிழர் கட்சியினர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பேன் என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்த நிலையில் அதனை நீதிபதிகள் நிராகரித்தனர்.

மேலும் வழக்கு விசாரணைக்கு மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனால் காவல்துறையினர் விசாரணையை தீவிப்படுத்தினர். நடிகை விஜயலட்சுமியிடம் ஆடியோ ஆதாரங்களை கைப்பற்றிய போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர்.

அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கடும் சச்சரவுகளைத் தாண்டி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார். இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.

அரசியல் அழுத்தம் காரணமாகவே இது போன்று நடப்பதாகவும் விஜயலட்சுமி தரப்பிடம் பேசி வருவதாகவும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற ஆணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. விஜயலட்சுமி தரப்பிடம் சுமூகமாக பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறி சீமானிடம் விசாரணை நடத்தும் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

இதையும் படிங்க: எனக்கு நியாயம் கிடைக்காது.. இதுதான் லாஸ்ட்..! வீடியோ வெளியிட்ட நடிகை..!

இந்த நிலையில் தனக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை, அதனால் இனிமேல் சீமான் விஷயத்தில் தலையிட போவதில்லை என்று நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். ஒருவழியாக சீமானின் பிரச்சனை ஓய்ந்தது என நினைத்திருக்கும் நேரத்தில் தன்னை பாலியல் தொழிலாளி என எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பி தானும் போராட போவதாக நடிகை விஜயலட்சுமி மீண்டும் வீடியோக்களை பதிவிட தொடங்கினார். 

தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சீமானுடன் இருப்பவர்கள் பல்வேறு விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை பற்றி அவதூறாக பேசி வருவதாகவும், அவர்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். பாலியல் குற்றவாளி என்று சொல்லும் போது உங்களுக்கு வலிப்பது போல தன்னை பாலியல் தொழிலாளி என்று சொல்வது சரியா என்றும் கேள்வி எழுப்பினார். போர் முடியவில்லை, இனிமேல் தான் போர் தொடங்குகிறது., உங்களுக்கு அக்கா தங்கைகள் இல்லையா என்ற தன்னுடைய ஆதங்கத்தை அந்த வீடியோவில் விஜயலட்சுமி வெளிபடுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: 'நான் பாலியல் தொழிலாளியா சீமான்..?'- கண்ணீர் மல்கக் கதறும் நடிகை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share