முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.. 50 வருடம் பின்னோக்கி சென்று விட்டதாக நெகழ்ச்சி..!
50 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்கள் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், 50 ஆண்டு பின்னோக்கி சென்று விட்டதாக முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.
கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 1975-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்து படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 120-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்ழ்சியில் கலந்து கொண்டனர். மேலும் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இதற்கான திட்டத்தை ஏற்படுத்தி இன்று அனைவரும் ஒன்று கூடியது மிக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.
அது மட்டுமில்லாமல் 1975-ம் ஆண்டு இவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை எட்டு பேரை இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்து, அவர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும் நிதி வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் மீதமுள்ள நான்கு ஆசிரியர்கள் வர முடியாத காரணத்தினால் அவர்களை நேரடியாக வீட்டிற்கு சென்று நிதி வழங்க இருப்பதாகவும் முன்னாள் மாணவர்கள் சார்பாக தெரிவித்தனர். இது மட்டும் இன்றி படித்த சபர்பன் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் பள்ளிக்கு நீதி வழங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் மோசடி கும்பல்.. பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ்..!
அப்போது முன்னாள் மாணவர் ஒருவர் கூறுகையில், பொதுவாக எங்கள் அனைவரையும் ஐயா, சார், போங்க, வாங்க என்று அழைப்பார்கள். ஆனால் இந்த சந்திப்பில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்களை சந்தித்தபோது அனைவரும் போடா வாடா என்று பேசியது மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகவும் இந்த நாளை வாழ்க்கையில் மறக்க முடியாது நாள் எனவும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இவர்கள் இந்த பள்ளியில் படித்த காலத்தில் நடைபெற்ற சம்பவத்தை அனைத்தையும் ஒன்று சேர்ந்து புத்தகமாகவும் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மாயமான மாணவர் சடலமாக மீட்பு.. கொலையா..? தற்கொலையா..? என விசாரித்து வரும் போலீசார்