உடையும் திமுக கூட்டணி... திருமாவுக்கும் கொக்கி.. குதூகலத்தில் எடப்பாடி பழனிசாமி..!
கம்யூனிஸ்ட் கட்சி கூட கேள்வி கேட்க தொடங்கிட்டாங்க... ஆனால் நீங்கள் மௌனம் காப்பது மக்களிடம் பெரும் அதிருப்தியை தந்துள்ளது’’ என விசிக தலைவர் திருமாவளவனையும் இப்போது தூண்ட ஆரம்பித்துள்ளது எதிர்கட்சிகள்.
தி.மு.க. கூட்டணியில் விரிசல் விழாதா? என எதிர்பார்த்துக் காத்திருந்த எடப்பாடி பழனிசாமி இப்போது குதூகல மூடுக்கு வந்திருக்கிறார்.
‘‘தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனபடுத்துவீர்களா நீங்கள்?’’ என முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க. கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருப்பதுதான் இப்போது அரசியலில் ஹாட் டாபிக்.
அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிப்பதாகக் கூறி, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, ‘எதற்காககவும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதாக நான் பேசினேனா? செய்திகளின் உண்மை தெரியாமலேயே அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுவதா?’ என அமைச்சர் மகேஷ் கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விசாரிக்காமல் ஏன் தாவுகிறீர்கள்?...கே.பாலகிருஷ்ணன், அண்ணாமலைக்கு நேரடி கண்டனம் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.
இந்நிலையில், மீண்டும் ‘தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனபடுத்துவீர்களா நீங்கள்?’ என முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சாதாரணமாக ஒரு கிராமத்தில் பட்டா கேட்டு இயக்கம் நடத்தினால் கூட, போலீசார் வழக்கு போடுகிறார்கள். ஒரு சிறப்புரை கூட்டம் என்று சொன்னால் கூட போலீசார் வழக்கு போடுகிறார்கள். ஒரு ஆர்ப்பாட்டம் என்று சொன்னால், ஒரு ஊர்வலம் என்று சொன்னால், ஒரு போராட்டம் என்று சொன்னால், போலீசார் வழக்கு போடுகிறார்கள்.
நான் கேட்கிறேன். முதல்வர் ஸ்டாலின் அவர்களை கேட்க விரும்புகிறேன். தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனபடுத்துவீர்களா நீங்கள்? எப்படி இப்படி போலீசார் கட்டுப்படாமல் செயல்படுகின்றனர்? தமிழகத்தில் ஊர்வலம் நடத்த கூடாதா? தமிழகத்தில் மக்கள் இயக்கங்கள் நடத்தக் கூடாதா? பாதிக்கப்பட்ட மனிதன் தனது உரிமைக்காக போராட கூடாதா?
ஆர்ப்பாட்டம் நடந்தால் அதை அனுமதி ரத்து செய்து, கைது செய்து முடக்கி விட முடியுமா? சீப்பை ஒளித்து விடுவதனாலே கல்யாணத்தை நிறுத்தி விட முடியுமா?’’ எனப்பேசினார் பாலகிருஷ்ணன். ஒரே கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுப்பிய கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்த நிலையில் ‘‘நேற்றையவரை எங்களை புகழ்ந்தவர்கள்… இன்றைக்கு இப்படி பேசுகிறார்கள்… பாலகிருஷ்ணனுக்கு என்ன நெருடல், என்ன தேவை என்று புரியவில்லை. அவர்களைது தேவையை பூர்த்தி செய்துவிடுவோம்’’ என்று அமைச்சர் சேகர்பாபு பேசியிருப்பதுதான் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகிவிட்டது. தி.மு.க. மீதான கோபம் கம்யூனிஸ்டுகளுக்கு அதிகரித்துவிட்டது.
தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படாதா? என காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இது குதூகலச் செய்தி. எப்படியாவது கம்யூனிஸ்ட் கட்சியை அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த புள்ளி ஒருவர் பேசிவருகிறாராம்.
‘‘கடைசி வரைக்கும் திமுகவை எதிர்த்து வாயை திறக்க மாட்டீர்களா ? இது என்னங்க அநியாயம்? கம்யூனிஸ்ட் கட்சி கூட கேள்வி கேட்க தொடங்கிட்டாங்க... ஆனால் நீங்கள் மௌனம் காப்பது மக்களிடம் பெரும் அதிருப்தியை தந்துள்ளது’’ என விசிக தலைவர் திருமாவளவனையும் இப்போது தூண்ட ஆரம்பித்துள்ளது எதிர்கட்சிகள்.
இதையும் படிங்க: அதிமுகவுக்காக ஆழம் பார்க்கும் பாஜக..? ‘உழவனை மாற்றுவதும் தலைவனை நீக்குவதும்..!’ அலறும் அண்ணாமலை ஆதரவாளர்கள்..!