×
 

சபாநாயகருக்கு எதிராக தீர்மானம்.... காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன? 

சபாநாயகர் அப்பாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் விசிக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

சபாநாயகர் அப்பாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் விசிக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

அவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கொண்டு வந்தார்.  இந்த தீர்மானத்தின் மீது எதிர்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமி பேசும் பொழுது,  பேரவைத் தலைவர் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை, அவர் நடுநிலையாக செயல்படவில்லை என குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.மேலும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தார்,  “போங்க, போங்க”என எங்களை கிடல் செய்கிறார் என ஒரு குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் இருக்கக்கூடிய மற்ற கட்சியின் உறுப்பினர்கள், தீர்மானத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது, சபாநாயகர் அப்பாவு நெல்லை தமிழில் பேசுவார், நல்ல தமிழில் பேசுவார். சபாநாயகர் அப்பாவை இரண்டு பக்கமும் பார்க்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க ஒரு திறமையான தலைவரை பெற்றுள்ளோம் என்ற ஒரு கருத்தை தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் சார்பில் இந்த தீர்மானத்தை கண்டிப்பாக எதிர்க்கிறோம் என்றும் முறியடிப்போம் எனவும் பேசினார். 

இதையும் படிங்க: செங்கோட்டையன் உடன் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை.. இபிஎஸ் மீதான அதிருப்தியை சரிக்கட்ட முயற்சி..!

அதனைத் தொடர்ந்து பேசிய சிந்தனை செல்வன்,  கடந்த காலங்களில் பேரவைத் தலைவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை தெரிவித்திருந்தார். ஒரு ஆளுமை நிறைந்த பண்பு நிறைந்த பேரவைத் தலைவராக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார் என்று,  அம்பேத்கரின் கருத்தியலை உள்வாங்கி பேரவைத் தலைவர் செயல்பட்டு வருகின்றார் என்றும், பேரவைத் தலைவர் மீது கொண்டு என்ற தீர்மானத்தை விசிக கடுமையாக எதிர்க்கிறது என்றும் தெரிவித்திருந்தார். 

அதனை தொடர்ந்து சிபிஎம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பேசும்போது, அதிமுக கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் துரதிஷ்டவசமானது கடந்த காலத்தில் அதிமுக பேரவைத் தலைவருக்கு வானலாவிய அதிகாரம் இருந்தது. ஆனால் அப்பாவு, எனது இரண்டு கண்களாக அவையில் உள்ள உறுப்பினர்களை பார்க்கிறேன் எனக்கூறியிருக்கிறார். தற்போது கால்புணர்ச்சியாக கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை சிபிஎம் எதிர்க்கிறது என தெரிவித்திருந்தார்.

அடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்  தளி ராமச்சந்திரன் பேசும் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி என பாகுபாடு பார்க்காமல் சம வாய்ப்பு வழங்கியவர், தற்போது பேரவைத் தலைவராக உள்ள சபாநாயகர் அப்பாவு. அவரது பணி தொடர வேண்டும் எனக்கூறினார். 
 

இதையும் படிங்க: எடப்பாடி 'OUT' செங்கோட்டையன் 'In'... சட்டப்பேரவையில் தரமான சம்பவம்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share