மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவதால் தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறைக்க இருப்பது தொடர்பாக விவாதிக்க மார்ச் 5ஆம் தேதி தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்காததால் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கட்சி துவங்கிய நாளில் இருந்து பெரும்பாலும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ள நிலையில் எந்த தேர்தலிலும் களம் காணாத பல கட்சிகளுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பாரபட்சமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 183 அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் அரசு தங்கள் விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே அழைக்க முடியாது எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தங்கள் கட்சியை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு.. ஜாமின் கோரும் சப்-இன்ஸ்பெக்டர்கள்.. நீதிமன்றம் போட்ட உத்தரவு..!
இதையும் படிங்க: ஜனநாயகத்தில் இந்தியா இன்னும் ஒரு குழந்தை தான்...