ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டது. முதல் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதையும் படிங்க: முதல்வரின் தேர்தல் வாக்குறுதி! கோவை கிரிக்கெட் மைதானத்திற்கு கிடைத்த தடையில்லாச் சான்று!!!

இந்த நிலையில், இன்று 2வது அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐசிசி சாம்பியன் போட்டிகளில் முதல் சாம்பியன் பட்டத்தை தென் ஆப்பிரிக்காவும், 2வது சாம்பியன் பட்டத்தை நியூசிலாந்து அணியும் வென்றன. அதன்பிறகு இந்த 2 முன்னாள் சாம்பியன்களும் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றதே இல்லை. எனவே இந்த போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ICC championship: கிங் கோலி ரிட்டர்ன்ஸ்.. பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்.. மாஸ் காட்டிய இந்திய அணி.!