போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதன் காரணமாக சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் ரவுடிகளின் மோதல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்த 2 ரவுடிகள், 8 பேர் கொண்ட கும்பலாம் வெறித்தனனாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 25). சரித்திர பதிவேடு குற்றவாளியான அருண் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று இரவு அருண் அவரது நண்பர் சுரேஷ் என்கிற படப்பை சுரேஷ் ஆகியோர் ஒன்றாக மது குடித்துள்ளனர். பின்னர் போதை அதிகமானதும், கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் படுத்தே உறங்கி உள்ளனர். அப்போது சுமார் 10 மணி அளவில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுமார் எட்டு பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை மக்களே உஷார்.. வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கத்திகுத்து.. டெலிவரி பாய் போல் வீடு புகுந்து துணிகரம்..!

போதையில் படுத்திருந்த அருண் மற்றும் சுரேஷ் ஆகியோரை, கண்மூடித்தனமாக அரிவாள் மற்றும் கத்தியை கொண்டு சரமாரியாக வெட்டியது அந்த கும்பல். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளனர். அந்த இடமே ரத்தக்காடாக மாறியது. அருண், சுரேஷ் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் இந்த கும்பல் அவர்களை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடியது.
இதில் படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அருண் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அவனை அக்கம்பக்கத்தினர், போலீஸார் உதவியுடன் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அருணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அருண் என்பவரது காதலி சாயின்ஷாவை ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்தது தெரிந்தது.
இதனால் காதலியின் கொலைக்கு பழிவாங்க அருண் சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளான். ஆனால் இந்த தகவல் சுக்கு காபி சுரேஷுக்கு முன் கூட்டியே தெரிந்து விட்டது. இதனால் இன்று சுக்கு காபி சுரேஷ் முந்திக்கொண்டு அருண் குமார் மற்றும் அவரது அண்ணன் அர்ஜுனன் ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான்.

அருண் பக்கத்தில் படுத்திருந்ததால் அர்ஜுனனுக்கு பதிலாக அருணுடன் சேர்த்து படப்பை சுரேஷையும் அந்த கும்பல் வெட்டி சாய்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோட்டூர்புரம் போலீசார் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தலைமறைவாக உள்ள கோட்டூர் புறத்தை சேர்ந்த சுரேஷ் என்கிற சுக்கு காபி உட்பட எட்டு நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கோட்டூர்புரத்தில் நடந்த இந்த இரட்டை கொலை முயற்சி சம்பவம் சென்னை முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை.. பெல்ட்டால் அடித்து கொன்ற மகன்.. தாய் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை..!